சனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய துணைக்கோள்கள் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சனி கிரகத்தை சுற்றி வருகின்றன. அமெரிக்காவின் Karniki Institute App Science என்ற ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், Subaru தொலைநோக்கி மூலம் சனிக்கிரகத்தில் ஆய்வின்போது இதனை கண்டறிந்துள்ளனர்.
சூரிய மண்டலத்தில் ஆறாவதாக கருதப்படும் சனி கிரகத்தினை தற்போது மொத்தம் 82 நிலவுகள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான நிலவுகளைக் கொண்ட கிரகமாக சனி விளங்குதிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான நிலவுகளை உடைய கிரகமாக திகழ்ந்து வந்த வியாழனின் இடத்திற்கு ( 79 நிலவுகள்), சனி கிரகம் வந்துள்ளது.
இவற்றில் 17 துணைக்கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதைக்கு எதிரான பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன. மீதமுள்ள மூன்று துணைக் கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன.