உங்களது பயன்பாட்டிற்காக TV ஒன்றினைக் கொள்வனவு செய்யும் போது அது தரத்தில் சிறந்ததாகவும், நீண்ட கால பாவனைக்கு ஏற்ற வகையிலும் இருக்கக் கூடியதாகவே தெரிவு செய்வீர்கள். நீங்கள் TV இனை தெரிவு செய்யும் போது பின்வரும் விடயங்களைப் பற்றி கருத்திற் கொள்வது சிறந்தது.

திரைத் தொழில் நுட்பம் நீங்கள் TV ஒன்றினைக் கொள்வனவு செய்யும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது TV screen. TV screen panel Technology அடிப்படையில் நீங்கள் TV ஒன்றினைத் தெரிவு செய்து பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. தற்போது பல புதிய பிரபல திரைத் தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

OLED திரைத் தொழில்நுட்பம் 

தற்காலத்தில் இலகுவில் பெறக் கூடிய திரைத் தொழில் நுட்பமாகக் கூறப்படுவது OLED திரைத் தொழில் நுட்பமாகும். தொலைக்காட்சி வகைகளுள் விலையுயர்ந்த வகைக்குள் OLED அடங்குகின்றது. OLED இன் விரிவான பெயர் Organic Light Emitting Diodes ஆகும். Old hydrocarbon சங்கிலிகளால் செய்யப்பட்ட ஒரு கரிம பொருட்களின் மின்சக்தி வழியாக ஒளியினை வழங்குகின்றது. OLED TV சிறந்த கறுப்பு அளவினைக் கொண்டுள்ளது. திரையின் ஏனைய பகுதிகள் ஒளிருகின்ற போது கறுப்பு நிறமாகக் காணப்படும் திரையின் பகுதிகளை வெறுமனே அணைத்துக் கொள்ள முடியும்.

LED திரைத் தொழில்நுட்பம் 

அநேகமானவர்கள் பயன்படுத்துகின்ற தொழில்நுட்பமாக LED திரைத் தொழில் நுட்பத்தினைக் கூற முடியும். LED இன் விரிவான விளக்கம் Light-emitting diode ஆகும். LED திரையினைச் சுற்றி சிறிய எல்லைகளை அனுமதிப்பதுடன், மெலிதானதாகவும், பிரகாசம் பொருந்திய பார்வை அனுபவத்தினையும் வழங்குகின்றது. இது C.C.F.L பின்னொளியினை விடவும் அதிக ஆற்றல் கொண்டதாகக் காணப்படுகின்றது.

QLED திரைத் தொழில்நுட்பம்

QLED இன் விரிவாக்கம் Quantum dot LED ஆகும். தற்காலத்தில் ஒரு புதிய தொழில் நுட்பமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பல நிறங்கள் கொண்ட ஒளியினை உருவாக்குவதற்கு குவாண்டம் புள்ளிகளைப் பயன்படுத்துவதுடன்; பிரகாசத்தினையும், நிறங்களையும் மேம்படுத்துவதற்கு Quantum Dot Layer இனைப் பயன்படுத்துகிறது. Quantum Dot LED திரைகள் நிலையான LED திரைகளைக் காட்டிலும் சிறந்தவையாகக் கருதப்படுகின்றது.

TV திரையின் அளவு 

உயர் செயற்றிறன் கொண்ட TV ஒன்றினை நீங்கள் கொள்வனவு செய்யும் போது நீங்கள் அவதானம் செலுத்த  வேண்டிய விடயமாக TV திரையின் அளவு காணப்படுகின்றது. TV பார்வையிடும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை, அதனை வைக்கும் இடம், உங்களது வருமான அளவு என்பவற்றினைக் கருத்திற் கொள்ள வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் திரையின் அளவானது உங்களுக்கும் TVக்குமான இடைவெளியைப் பொறுத்தது.

நீங்கள் TV யில் இருந்து HD இற்கான திரையின் உயரத்தினை விட 3 மடங்கு அதிகமாகவும், 4K Ultra HD திரை உயரத்திற்கு 1.5 மடங்கு அதிகமாகவும் காணப்பட வேண்டுமென்பது பொது விதியாக உள்ளது. இரு மடங்கு நெருக்கமாக உட்கார்ந்து TV பார்க்க வேண்டுமெனின் 4K Ultra HD TV இனை நீங்கள் கொள்வனவு செய்யலாம்.

HD தெளிவுத் திறன்

TV ஒன்றினைக் கொள்வனவு செய்யும் போது நீங்கள் HD தெளிவுத் திறன் பற்றி கருத்திற் கொள்ள வேண்டும்.  ஒரு திரையில் படமொன்றினை உருவாக்குவதற்குத் தேவையான பிக்சல்களின் எண்ணிக்கையினை தெளிவுத்திறன் விபரிக்கின்றது. HD என்பது நீண்ட காலமாக இருந்து வருகின்ற TV இன் தெளிவுத் திறன் ஆகும். தற்போது உற்பத்தி செய்யப்படுகின்ற 4K Ultra HD set திரையானது HD திரைகளை விட 4 மடங்கு பிக்சல்லினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. ஆகையினால் HD TV படங்களை விட அழகாகவும், அதிக யதார்த்தம் கொண்டதாகவும் காணப்படும்.

புதுப்பிப்பு வீதம்

ஒரு படம் ஒரு வினாடிக்கு எத்தனை தடவைகள் புதுப்பிக்கப்படுகின்றது என்பதே புதுப்பிப்பு வீதம் எனப்படுகின்றது. இது Hz இல் அளவிடப்படுகின்றது. நிலையான புதுப்பிப்பு வீதம் வினாடிக்கு 60 முறையாகக் காணப்படுகின்றது. உறுதியான படத்தினை உருவாக்குவதற்காக உற்பத்தியாளர்கள் புதுப்பிப்பு வீதத்தினை அதிகரித்துள்ளனர்.

HDMI இணைப்புக்கள் மற்றும் கூடுதல் விருப்பங்கள்

TV ஒன்றினைக் கொள்வனவு செய்யும் போது HDMI உள்ளீடுகளின் எண்ணிக்கைகளைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். Sound bar, Chrome cast, Game Console ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வதற்கு இவை பயன்படுகின்றன. 4K Ultra HD TV யினைப் கொள்வனவு செய்வதற்கு நீங்கள் முயற்சித்தால் HDMI இணைப்புக்கள் எதிர்கால Ultra HD பொருட்களுக்கு இடமளிக்கக் கூடியதாக உள்ளதைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொண்டு TV கொள்வனவில் ஈடுபடுங்கள். இதன் மூலமாக நீங்கள் தரத்தில் சிறந்த TV கொள்வனவில் ஈடுபட்ட திருப்தியினை பெற்றுக் கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.