Android செயலிகளை Java, Kotlin, Python, React Native என பல நிரலாக்க மொழிகள் மூலம் உருவாக்கிக் கொள்ள முடியும். தற்போது Android செயலிகளை உருவாக்குவதற்காக Flutter இனையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இவற்றில் நன்கு அறிமுகமானதைப் பயன்படுத்தி Android செயலிகளை வடிவமைக்க முடியும். சான்றாக Java அல்லது Kotlin நன்கு தெரிந்தவர்கள் இவற்றின்  மூலமாக செயலியை  எளிதானதாக  வடிவமைக்கலாம். இவ்வாறான பல நிரலாக்க மொழிகள் காணப்படினும் மிக எளிதாக கற்று செயற்படுத்தக்கூடியது Flutter ஆகும். HTML முறையினை ஒத்ததாக Flutter காணப்படுகின்றது. Flutter இல் Widgets எனப்படுகின்ற சிறிய பொருட்களே காணப்படுகின்றன. மிக குறைந்த நேரத்தில் ஒரு செயலியினை வடிவமைக்கலாம். Center செய்வதற்கு ஒரு Widget, கட்டடம் வரைவதற்கு ஒரு Widget, Animation செய்வதற்கு ஒரு Widget என்ற வகையில் மிகவும் எளிதாக செய்து முடிக்கலாம். 

ஒரு Android செயலியாகிய WhatsApp இனை அவதானிக்கும் போது WhatsApp இன் ஆரம்பத்தில் App Bar காணப்படும். பின்னர் அதன் கீழே Messages அனைத்தும் காண்பிக்கப்படுகின்ற Single Scroll View என்று கருதப்படும் மேலும் கீழுமாக அசைக்கக்கூடிய ஒரு அமைப்பு காணப்படும். இதற்கு அடுத்ததாக Messages, பயனர் ஒருவரின் புகைப்படம், அவரது பெயர், Messages களின் எண்ணிக்கை காண்பிக்கப்படும் ஒரு வட்ட சுட்டி என்பவையுள்ள Card அமைப்பு காணப்படும். பின்னர் கீழ்ப்பகுதியில் Floating Action Button காணப்படும். இவை அனைத்தும் Flutter இல் Widget வடிவில் ஆயத்தமாக கிடைக்கப் பெறுகின்றன. WhatsApp இன் முதற் பக்கத்தினை 7 Widget மூலம் முடித்துவிட முடியும். அதாவது நாம் எழுதுகின்ற நிரலின் அளவு மிகவும் சிறியதாகவே காணப்படுவதோடு; இதனை மிகக் குறைந்த நேரத்திலும் வடிவமைத்துக் கொள்ளலாம்.

Flutter இல் காணப்படும் Animation தொகுப்புகள் மூலமாக ஒரே வரியில் ஒரு பொருளை பல விதங்களில் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். ஒரே வரியில் ஒரு பொருளை பல வகைகளில் மாற்றிக்கொள்வதற்கும், Button களை அழுத்துவதற்கும் Animation தொகுப்புகள் பல காணப்படுகின்றன. இதனை மிக இலகுவாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அத்துடன் Flutter இல் Plugins என்று கூறப்படுகின்ற கூடுதல் நிரல்களும் காணப்படுகின்றன.

மேலும் Flutter இல் காணப்படும் Hot Reload மூலம் ஒரு செயலியை வடிவமைப்பதற்கான நிரல்களை தொகுத்து எழுதி அவை சரியாக உள்ளமையினை திரையில் அவதானிப்பதற்கு Ctrl +S இனை அழுத்தும் போது வடிவமைக்கப்பட்ட நிரலின் அமைப்பு மிக குறுகிய வினாடியில் திரையில் தோன்றும்.

Flutter கற்பதற்கு இலகுவாக காணப்படுகின்றது. Flutter இல் Code நீளம் குறைவாக காணப்படுவதினாலும், அதிக Widgets மற்றும் Animation சேர்க்கும் வாய்ப்புக்கள் காணப்படுவதாலும் Flutter இனைப் பயன்படுத்தி மிகக் குறைந்த நேரத்தில் Android செயலியினை வடிவமைத்துக் கொள்ளலாம். Android இல் மட்டுமல்லாது Flutter இல் எழுதிய செயலியினை iOS இலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கைபேசியில் செயலிகள் வடிவமைப்பதற்குத் தெரியாதவர்கள், நிரலாக்க மொழிகள் தெரியாதவர்கள் Flutter மூலம் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.