தற்போதைய காலகட்டத்தில் ஒரு தொழிலானது வளர்ச்சி பெற தொழில்நுட்பம் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. ஓர் தொழிலின் ஒவ்வொரு பாகத்திலும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பு மற்றும் சேவைகளை சந்தைப்படுத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) தொழில்நுட்பம் தற்போது பிரபலமாகி உள்ளது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) என்பது மின்னணு ஊடகம் வழியாக தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்துதல் ஆகும். ஒன்லைன்  மூலமாக Digital Marketing ஐ செலவு இல்லாமல் செய்து கொள்வதோடு  Digital Marketing இல் உள்ள பல உத்திகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான சந்தைப்படுத்தலை மேற்கொள்ளவும் முடியும். அவ்வாறான உத்திகளாவன:

Social Media Marketing

Social Media Marketing என்பது சமூக வலைத்தளங்கள் மூலம் நிறுவனத்தை பற்றி அறியத்தருவதாகும் இன்றயை உலகில் பலரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு செலுத்துகின்றனர். ஆகையினால் சமூக வலைத்தளங்கள் மூலமாக சந்தைப்படுதலை மேற்கொள்வது சிறப்புக்குரிய ஒரு விடயமாகும். Face book, Twitter, Google plus, linked in, Pinterest, Instagram போன்ற பலதரப்பட்ட சமூக வலைத்தளங்களில் தங்களின் நிறுவனத்தின் பெயரில் தனி பக்கம் ஒன்றினை ஆரம்பித்து அதில் தங்கள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் தனித்துவ தன்மைகளைப் பற்றியும் விபரிப்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் சேவைகளையும் குறிப்பிட்டு; இவை ஏனைய நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதனையும் தம் பக்கத்தில் காட்சிப்படுத்த வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் உங்களின் சேவைகளை பெறுவதனால் எவ்வாறான நன்மைகளை  பெற்றுக்கொள்கிறார்கள் என்பதனையும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் சேர்க்க வேண்டும்.

தொழில் ரீதியான தகவல்களை  படங்கள் (images), வீடியோக்கள் (videos), இன்போ கிராபிக்ஸ் (Infographics), கிராபிக்ஸ் மற்றும் டிசைன்கள் (graphics & Design) மூலமாகவும் பிரசூரித்துக்கொள்ளலாம்.  இவை மக்களை இலகுவாக சென்றடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. Face book group, google plus collection போன்றவற்றிலும்   தொழிலைப் பற்றி பதிவிட முடியும்.

Video Marketing

Video Marketing என்பது தொழில் மற்றும் சேவைகளை வீடியோ மூலம் விளக்கி; விளம்பரம் செய்தல் ஆகும். வீடியோக்கள் பதிவிடுவதன் மூலம் மக்களால்   நாம் கூற வந்த விடயத்தை இலகுவாக விளங்கிக்கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்றப்படுத்த முடியும். இதற்காக Whiteboard & Explainer Videos, Animation video, Intro video, Ads video, promotional & brand videos, professional spokesperson video போன்ற வீடியோக்கள் செயற்பாட்டிலுள்ளன. இவ்வகையாக வீடியோக்களை தயாரித்து எவ்வித செலவும் இல்லாமல் YouTube, Facebook and Vine, Dailymotion and Vimeo, Snapchat, Instagram போன்ற பல தளங்களில் பதிவிடலாம்.

Search Engine Marketing

தேடு பொறி மேம்படுத்தப்படுதல் [Search Engine Optimization (SEO)] என்பது ஒரு தேடுபொறி வழங்கிய முடிவுகளின் பட்டியலில் தளம் அதிகமாகத் தோன்றுவதை உறுதி செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயல்முறை ஆகும். நாம் தகவல்களைப்  பெற்றுக்கொள்ள அதிகமாக Google, Yahoo  போன்ற தேடு பொறிகளையே (Search engine)  அதிகம் நாடுகின்றோம்.

ஒரு தொழில் அதிகமான வாடிக்கையாளர்களை பெறவேண்டுமெனில்; அதன் இணையத்தளங்கள் தேடு பொறியின் பக்கங்களில் இடம்பெறவேண்டும். ஏனெனில் தேடு பொறியில் தேடுபவர்கள் பெரும்பாலும் முதல் 4 பக்கங்களில் இடம்பெறும் வலைத்தளங்களையே  அணுகுவர் என்பது யாவரும் அறிந்த உண்மை.  ஆகையினால் தம் நிறுவனத்தின் வலைத்தளத்தை இவற்றில் முதன்மைப்படுத்திக்கொள்வதன் மூலம் தம் சேவையினை  மக்களுக்கு தெரியப்படுத்தலாம். google AdWords, Search analytics, Web analytics, Display advertising, Ad blocking, Contextual advertising, Behavioral targeting, Affiliate marketing, Mobile advertising இவை யாவும் Search Engine Marketing ல் பயன்படுத்தப்படுகின்றன.

Content Marketing

உள்ளடக்க சந்தைப்படுத்தல்  (Content Marketing ) என்பது தொழிலை பற்றிய content ஐ சந்தைப்படுத்துவது ஆகும். இணையத்தளத்தில் (website) சிறந்த உள்ளடக்கத்தை  (content) பயன்படுத்துதல், நிறுவனம், தயாரிப்பு மற்றும் சேவை சார்ந்த கட்டுரைகளை (post) Blog யில் பதிவிடுதல் , எளிதில் புரியும்படியாக சிறந்த படங்கள் (image), எடுத்துக்காட்டுக்கள் (Illustrations), சான்றுகள் (Testimonials), இன்போ கிராபிக்ஸ் (info graphics) போன்றவைகளை பயன்படுத்துதல், Content ஐ சமூக வலைத்தளத்தில் (social media) பதிவிடுதல், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஊடகம் (online media), இதழ்கள் (magazines), செய்தித்தாள்கள் போன்றவற்றில் வெளியிடுதல், வீடியோக்களை (visuals,video) பயன்படுத்துதல் அதை சந்தைப்படுத்துவது போன்ற பலவகை சார்ந்த Content Marketing செய்யலாம்.

E-mail Marketing

Email Marketing என்பது தமது தயாரிப்பு மற்றும் சேவையினைப் பற்றி   வாடிக்கையாளர்களின் ஈமெயில் முகவரிக்கு தகவல்களை அனுப்புவது ஆகும். பல ஈமெயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மூலம் மொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்ப முடியும். இத்தகைய இலவச சேவையை வழங்கும் நிறுவங்களுக்கு சான்றாக  Mail chimp, Aweber, Constant contact, fresh mail, madmimi, icontact போன்றவற்றை கூறலாம்.

Influence Marketing

சமூகத்தில் நன்மதிப்பு மிக்கவர்கள், ஆளுமை கொண்டவர்கள் மற்றும் சமூகத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்களை நாடி தம் நிறுவனம் பற்றிய சிறந்த தகவல்களை அவர்களிடமிருந்து கேட்டறிந்து கொண்டு அவற்றை தம் வலைத்தளத்தில் பதிவிடுவதோடு; அவர்களின் வலைத்தளங்களிலும் பதிவிட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக  சந்தைப்படுதலை மேற்க்கொள்ளலாம்.

Mobile Marketing

Mobile Marketing என்பது வாடிக்கையாளரின் தொலைபேசிக்கு தம் நிறுவனம் மற்றும் சேவைகள் பற்றி தகவல்களை அனுப்புவது ஆகும். பெரும்பாலான மக்கள் தொலைபேசி மூலமாகவே இணையத்தை பயன்படுத்துகின்றனர். ஆகையினால் தம் நிறுவனத்தினைப் பற்றி மக்களுக்கு தகவல்களை Mobile மூலம் அனுப்பி சந்தைப்படுத்த முடியும். இதற்காக  pushengage.com, foxpush.com, pushcrew.com, izootoo.com போன்ற சேவை நிறுவனங்கள் இலவச சேவையினை வழங்குவதோடு pp based marketing (android & iOs App), Mobile search ads, Mobile image ads, Location-based marketing, SMS, QR codes, In-game mobile marketing மூலமும்  Mobile Marketing செய்ய முடியும்.

இவ்வாறான  பல தொழில்நுட்ப ரீதியான சந்தைப்படுத்தல் வழிமுறைகள் மூலமாக தம் நிறுவனத்தினையும்; அதன் சேவைகளையும் உலகறியச் செய்ய முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.