Earphone, நம் அன்றாட வாழ்க்கையில் ஓர் அத்தியவசியப்பொருளாக மாறி வருகின்றது,நாம் அருகில் இருப்பவர்களை தொந்தரவு செய்யாமல் songs, videos, callings போன்ற அனைத்தையும் கேட்கக் கூடியதாக உள்ளது.

இதற்கு நாம் நம் தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

எந்த ஒரு பொருளில் நன்மைகள் இருப்பது போலவே தீமைகளும் இருக்கும். இவை தெரிந்து பயன்படுத்தினால் பாதுகாப்பாக பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

Earphone பயன்பாட்டில் ஏற்படும் தீமைகளை பார்ப்போம்.

1)Listening at high volume for long periods may damage your hearing.

நம்மில் பலருக்கு High Volume இல் கேட்பது மிகவும் பிடிக்கும், உங்கள் கையடக்க தொலைபேசியில் volume அதிகரிக்கும் போது ‘Listening at high volume for long periods may damage your hearing.’ இவ்வாறன ஓர் எச்சரிக்கை செய்தி கையடக்க தொலைபேசித் திரையில் வருவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் ஆனாலும் நாம் இதை பொருட்படுத்தாமல் ‘ok’ யை click செய்து விட்டு அதிக volume-இல் பயன்படுத்துவோம், இதனால் காலப்போக்கில் காதின் கேள் திறன் குறைவடைந்து இறுதியாக காது முழுவதுமாக கேளாமல் போய்விடும். நாம் போதுமான அளவில் volume வைத்து கேட்பதால் மட்டுமே காதிற்க்கு ஏற்படும் பாதிப்பை இல்லாது செய்யலாம்.

2) Sharing Headphones is a Really Bad Idea.

நம்மில் பலர் இந்த தவறை செய்து இருக்கின்றோம். மற்றவரின் Earphone மற்றும் Headphone-ஐ பயன்படுத்துவது உண்டு இவ்வாறு மாற்றி மாற்றி உபயோகப் படுத்துவதால் காதுகளில் உள்ள Bacteria, Fungus, Ear infections போன்றன தொற்றிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. எனவே Earphone மற்றும் Headphone-ஐ வாங்கும் போது அல்லது கொடுக்கும் போது சுத்தம் செய்து பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறன தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இதைவிட நீங்கள் ஏனையவரின் Earphone மற்றும் Headphone-ஐ பயன்படுத்தாது இருப்பது உங்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கு  Earphone மற்றும் Headphone-ஐ கொடுத்து உதவுவோருக்கும்  நன்மை தரும்.

3) Ear Pain After Using.

நம்மில் பலருக்கு ஒரு முறையாவது இந்த பாதிப்பு வந்து இருக்கும். Earphone மற்றும் Headphone-ஐ அதிக நேரம் பயன்படுத்துவதால் இந்த வலி ஏற்படும். இதனால் நாம், நமது காதுகளுக்கு ஏற்றாற்போல் Earphone-ஐ தெரிவு செய்வோம். இவரான நமக்கு இணக்கமாக தெரிவு செய்து பயன்படுத்தும் போது வெளியில் உள்ள வளி கதினுள் போகாது அவ்வாறே காதினுள் உள்ள வளி வெளியில் போகாது இதனால் வளி அடைந்து இருப்பதால் நம்முடைய செவித்திறன் குறைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. Earphone மற்றும் Headphone-ஐ பயன்படுத்தும் போது medium volume-இல் பயன்படுத்துங்கள் அத்துடன், அதிகம் வாடிக்கையாக பயன்படுத்தாது தேவையான நேரம் மட்டும் பயன்படுத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.