உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளங்களில் Facebook உம் ஒன்றாகும். ஜெர்மன் புள்ளிவிபரப்பட்டியல் படி, 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், 2.45 Billion  பயனர்கள்  Facebook செயலியில் உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் Facebook அதிக பிரபலத்தைப் பெறும் போதும் , பாதுகாப்பு ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறி வருகிறது. Facebook இப்போது அதன் தனியுரிமை சரிபார்ப்பிற்கென  நான்கு சமீபத்திய அம்சங்களுடன் புதுப்பித்துள்ளது. இது பயனர்களின் Account-இன் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

தனியுரிமை  சரிபார்ப்பிற்கான புதிய பதிப்பு இந்த வாரம் வெளியிடப்பட்டது.

1.நீங்கள் பகிர்வதை யார் பார்க்க முடியும்?

நீங்கள் பகிர்வதை யார் பார்க்க முடியும்?(Who Can See What You Share?) என்பதனை Facebook Account  வைத்திருக்கும்  நீங்கள் தீர்மானிக்க முடியும்.

2.உங்கள் Account-ஐ எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது? (How to Keep Your Account Secure)

உங்கள் Facebook  Account-ன் கடவுச்சொல் Hack செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கலாம் அல்லது உங்கள் கடவுச்சொல்லை யாராவது அறிந்திருக்கலாம். வலுவான கடவுச்சொல்லை அமைப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் சுயவிபரத்தின் பாதுகாப்பை அதிகரிக்க ‘உங்கள் கணக்கை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது’  தனியுரிமை அம்சம் உதவும்.ஒருவர் login alerts Turn on  செய்வதினால் , யாராவது தங்கள் சுயவிவரங்களில் உள்நுழையும்போது அதன் Updates  மற்றும் பதிப்புகளை அவர் பெறலாம்.

3.Facebook-ல் மக்கள் உங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்? (How People Can Find You on Facebook)

இந்த அம்சம் விபரம் வைத்திருப்பவர்கள் Facebook-ல் அவர்களைத் தேடலாம் மற்றும் friend requests   அனுப்பலாம் அல்லது Request  சேர்க்கலாம் (add requests)என்பதை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும்.

4.தரவு அமைப்புகள்? (Your Data Settings on Facebook)

இந்த அம்சம் பயனர்கள் Facebook-ல் மற்ற செயலிகளுடன் பகிரும் தகவல்களை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும்.

மேலும் Facebook-ன் Desktop  தளத்தில், மேல் வலதுபுறத்தில் உள்ள கேள்விக்குறி icon (?) தட்டுவதன் மூலம் பயனர்கள் தனியுரிமை சரிபார்ப்பை அணுகலாம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.