உங்கள் Website இன் வளர்ச்சியினைத் தீர்மானிக்கக்கூடியதாக இருப்பது நீங்கள் வாங்கும் Hosting ஆகும். ஆகவே நீங்கள் தவறான Hosting வாங்கும் போது உங்கள் website இன் வளர்ச்சி மிகவும் குறைந்துவிடும். ஆகையினால் Hosting பற்றிய தெளிவான கருத்தினை நீங்கள் விளங்கிக் கொண்டு அதனை வாங்க வேண்டும்.

Hosting வாங்குவதற்கு முன்பு அறிந்துகொள்ள வேண்டியவை. 

முதலில் நீங்கள் எதற்காக website உருவாக்குகின்றீர்கள் என்பதனை நினைவில் வைத்து கொள்ளும் பொழுதே உங்களுக்கு உங்கள் Hosting இன் தேவை பற்றிய தெளிவான பார்வை கிடைக்கும்.

Disk Space: முதலில் உங்கள் Website Store செய்வதற்குத் தேவையான Storage தேவைப்பாடு காணப்படும். அதனால் unlimited storage இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் SSD Storage ஆகவும் இருக்க வேண்டும். SSD இருப்பதன் மூலம் உங்கள் website மின்னல் வேகத்தில் செயற்படும்.

Bandwidth:  Bandwidth அதிகமாக காணப்பட வேண்டும். நீங்கள் எக் காரணத்திற்காக website ஆரம்பித்தாலும் அதிக பார்வையாளர்களை உள்ளீர்க்கும் அளவிற்கு உங்கள் website அமைய வேண்டும்.எனவே  இதற்காக Bandwidth அதிகமாக இருக்கும் Hosting இனை தேர்வு செய்யுங்கள். நீங்கள் Hosting வாங்குவதற்கு முன்னர் இவை  இரண்டும் இருக்குமாறு தேர்வு செய்துகொள்ளுங்கள்.

Price of Hosting: Website ஆரம்பிப்பதற்கு முன்னர் நீங்கள் இதற்காக செலவு செய்யும் பணத்தின் பெறுமதியை கருத்திற்கொள்ளுங்கள். அத்தோடு Hosting இனை தேர்வு செய்யும் முன்னரும் நீங்கள் தீர்மானித்திருக்கும் பணத்தின் பெறுமதிக்கு தகுந்த வகையில் Hosting இனை தேர்வு செய்யுங்கள்.  நீங்கள் தேர்வு செய்யும்  Hosting Plan உங்கள் budget இற்கு ஏற்ப அமையவில்லையாயின் ஏனைய Hosting இனைத் தேர்வு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். அதுமட்டுமல்லாமல் இப்பொழுது அனைத்து Hosting நிறுவனங்களும்  One Click Upgrade Feature இனை அறிமுகப்படுத்தியுள்ளன. அதனால் நீங்கள் Low Budgetல் முதல் Hosting இனை தேர்வு செய்து பின்னர் Upgrade செய்ய நினைக்கும் போது சுலபமாக செய்து கொள்ள முடியும். இவற்றை அறிந்து நீங்கள் Hosting இனை தேர்வு செய்யும் போது உங்கள் Hosting நீங்கள் நினைப்பதைப் போல் சிறப்பானதாக அமையும்.

Website Requirement: உங்கள் website இற்கு தேவையான அனைத்து தேவைகளும் நிறைவு செய்திருக்க வேண்டும். உங்களுக்கு தேவையான அளவிற்கு இடம் மற்றும் வேகம் இருப்பதை எண்ணிப் பாருங்கள். அத்துடன் Hosting இனைப்பற்றிய  Reviews களை வாசியுங்கள். அதன்பின் உங்களுக்கு பிடித்திருக்கும் Hosting இனை வாங்குங்கள்.

Customer Support: Customer Support என்பது இங்கு முக்கியமானதாக காணப்படுகின்றது. நீங்கள்   Website Create செய்வதில் திறமையானவராக இருந்தாலும் சில சமயங்களில் நீங்கள் சில தொழில்நுட்ப பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அதனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் Hosting Customer Support சிறப்புடன் உள்ளமையினை ஆராய்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பினை வழங்குபவர்கள் காணப்பட்டால் மாத்திரமே உங்கள் Website இற்கு பிரச்சனைகள் ஏற்படும் போது உடனடியாக சரி செய்துகொள்ள முடியும்.

Buy Long Term With Free Domain: நீங்கள் முதல் முறையாக Hosting இனை தேர்வு செய்கின்றீர்கள் எனின் நீங்கள் அதிக பணத்தினை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். மாதாந்த கட்டணம் செலுத்தும் வகையில் Hosting இனை தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் Hosting வாங்கும் போது Yearly Basis அடிப்படையில் வாங்குங்கள். இவ்வாறு வாங்குவதன்  மூலம் நீங்கள் உங்கள் பணத்தினை மீதப்படுத்திக்கொள்ள முடியும்.

Yearly Basis அடிப்படையில் நீங்கள் Hosting இனை வாங்கி ஒரு வருடம் முடிந்த பின்னர் மீண்டும் New Account Create செய்து புதிய வாடிக்கையாளராக மீண்டும் இணையுங்கள். இவ்வாறு செய்யும் போது உங்களுக்கு ஏற்படும் செலவினை குறைத்துக்கொள்ள முடியும்.அதிகமான Hosting நிறுவனங்கள் இலவச Domain Name வழங்குகிறது. அதனால் உங்களுக்கு தனியாக domain பணம் செலுத்தி வாங்க முடியவில்லை எனின் நீங்கள் இலவச Domain வழங்கும் Hosting நிறுவனங்களை தேர்வு செய்ய முடியும். இவற்றை அறிந்து நீங்கள் Hosting இனை தேர்வு செய்யும் போது உங்கள் Hosting நீங்கள் நினைப்பதைப் போல் சிறப்பானதாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.