“தோல்வியும்வெற்றியும் நம் வாழ்க்கையின் சுக துக்கங்களேயன்றி என்றுமே நிலையானதும் அல்ல நிரந்தரமானதும் அல்ல”. 

ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும் போது அதில் வெற்றியடைய வேண்டும் என்னும் எண்ணத்துடனேயே அனைவரும் செயற்படுவர். அதே போல ஒரு தொழிலை ஆரம்பிக்கும் போதும் அதில் வெற்றியை மட்டுமே சந்திக்க வேண்டும் எனும் எண்ணம் தொழில் முனைவோர் மத்தியில் உருவாகின்றது. ஆனால் இவர்கள் நினைப்பது சில வேளைகளில் நிராசையாகப் போய் விடுகின்றது. தற்போது நிகழ்த்தப்படும் ஆய்வுகளைக் கருத்திற்கொண்டு செயற்படும் போது 80% ஆன Start Up நிறுவனங்கள் ஆரம்பித்த 03 ஆண்டுகளுக்குள் தோல்வியைத் தழுவிக்கொள்வதாக அறிய முடிகின்றது. எனவே 20% ஆன Start Up நிறுவனங்களே வெற்றியை அடைகின்றன.    

ஒரு தொழிலை ஆரம்பிக்க முயற்சிக்கும் தொழில் முனைவோர்கள்; 80% ஆன Start Up நிறுவனங்கள் எவ்வாறு தோல்வியடைந்தன என்பதை அறிந்து கொண்டுஅவற்றை நுணுக்கமாக ஆராய்ந்துஅவற்றின் மூலம் நாம் கற்க வேண்டியவற்றையும் பெற்றுஇவற்றிலிருந்து நாம் எவ்வாறு முன்னோக்கி சென்று வெற்றியை அடையலாம் என திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு செயற்படும் போது தோல்வி ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகக் காணப்படும். 

CB Insights என்னும் நிறுவனம் தொழில்முதலீடு மற்றும் முதலீட்டாளர் பகுப்பாய்வு ஆராய்ச்சி நிறுவனமாகும். உலகின் நம்பகத்தன்மை உள்ள நிறுவனங்கள், Start Up நிறுவனங்கள்அவர்களின் முதலீட்டாளர்கள், Venture Capital மற்றும் angel investment போன்ற தகவல்களை CB Insights ஆராய்ச்சி நிறுவனமானது வழங்கி வருகின்றது. அந்த வகையில் CB Insights எனப்படும் ஆராய்ச்சி நிறுவனமானது தோல்வியுற்ற 101 Start Up நிறுவனங்களைப் பற்றி ஆராய்ந்து அவை தோல்வியடைந்தமைக்கான 20 முக்கிய காரணங்களை முன்வைக்கின்றன. அத்தோடு  எவ்வகையான காரணங்களால் எவ்வளவு சதவீதமான Start Up நிறுவனங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன எனவும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  

Start Up நிறுவனங்கள் தோல்வியடைந்தமைக்கான காரணங்களை CB Insights என்னும் நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில் நோக்கினால்; 

 • No Market Need – 42%  
 • Not the Right Team – 23%
 • Pricing/Cost Issues – 18%
 • Need/Lack Business Model – 17%
 • Ignore Customers – 14%
 • Loose Focus – 13%
 • Pivot Gone Bad – 10%
 • Bad Location – 9% 16. 
 • Legal Challenges – 8%
 • Don’t Use Network/Advisors – 8%    
 • Burn Out – 8%
 • Failure To Pivot – 7%
 • Ran Out Of Cash – 29%
 • Get Outcompeted – 19%
 • Poor Product – 17%
 • Poor Marketing – 14%
 • Product Mis-Timed – 13%
 • Disharmony on Team/Investors – 13%
 • Lack Passion – 9%
 • Not Financing/Investor Interest – 8%

ஆகவே ஒரு தொழிலை ஆரம்பிக்கும் முன்னர் இவற்றை ஆராய்ந்தறிந்து செயற்பட்டு  வெற்றி பெறும் 20% ஆன தொழில் முனைவோமுனைவோராக நீங்களும் மாறிடுங்கள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.