பிரபல Google நிறுவனம் தனது Video அழைப்பு பயன்பாட்டை (Google Meet), அனைத்து பயனாளர்களுக்கும் இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போதைய உலக நிலை காரணமாக தங்கள் பயனாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் Google, Microsoft மற்றும் Facebook போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் Video அழைப்பு தளங்களை புதுப்பித்து வருகின்றன.

பிரபல இணைய உலாவி நிறுவனமான Google தனது Premium Video ஒன்றிணைந்த அழைப்பு  தளமான Google Meet-ஐ உலகலாவிய ரீதியில் முற்றிலும் இலவசமாக்கியுள்ளது. Google Meet ஆனது Zoom செயலிக்கு பெரும் போட்டியாக உள்ளது.

Google suite துணைத் தலைவரும் பொது மேலாளருமான Javier Soltero; “இன்று, எங்கள் Premium Video Meeting அழைப்பு தயாரிப்பான Google Meet-ஐ அனைவருக்கும் இலவசமாக உருவாக்கி வருகிறோம், இது வரும் வாரங்களில் கிடைக்கும்” என்று உறுதிப்படுத்தினார். “மே மாத தொடக்கத்தில் தொடங்கி, மின்னஞ்சல் முகவரி உள்ள எவரும் இதில் பதிவுசெய்து பயன்பெறலாம்.என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, Google வணிகம் அல்லது Google கல்வி கணக்கு மூலம் மட்டுமே அழைப்புகளை அமைக்க முடியுமானதாக இருந்தது. இனி, வரும் காலங்களில் Google Meet-இல் சந்திப்பு இணையத்தில் மற்றும் iOS அல்லது Android-ற்கான Mobile பயன்பாடுகள் வழியாக அனைவருக்கும்  இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று Google அறிவித்துள்ளது.

மேலும் Google calendar- ஐப் பயன்படுத்துபவர்கள், அதிலிருந்து எளிதாக அழைப்புகளை ஏற்படுத்த  முடியும் என்று Google கூறுகிறது. மேலும் இந்த அழைப்புகள் மூலம், ஒரு Video அழைப்பில் 100 பேரை பங்கேற்க அனுமதிக்கிறது.

G Suite இன் (https://gsuite.google.com/) மூலம் உங்கள் பிரதான கணக்கை (Account) திறந்து அதன் பின் ஏனையவர்களை ஒன்றிணைந்த அழைப்புக்கு  இணைக்கலாம்

Google Meet-இல் இலவச Video அழைப்புகளை செய்வது எப்படி?

முதலில்  நீங்கள் இலவச பதிப்பில் பதிவுபெற Google Meet (Google Meet page)வலை பக்கத்தைப் பார்வையிட வேண்டும். Google சந்திப்புக்கான பெயர், மின்னஞ்சல், நாடு மற்றும் முதன்மை பயன்பாடு போன்ற விபரங்களை கொடுக்கவும். Google-ன் சேவை விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு, சமர்ப்பி என்பதை தட்டவும். இந்த சேவையை பயன்படுத்த தயாராக இருக்கும்போது உங்களுக்கு அறிவிப்பு வரும்.

பின், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  • meet.google.com க்குச் செல்லவும். Android அல்லது iOS பயன்பாடுகளிலும் பயன்பாட்டைத் திறக்கலாம்.
  • புதிய சந்திப்பைத் தொடங்கு என்பதை Click செய்யவும்  அல்லது Plus(+)  குறியீட்டை Click செய்யவும்.
  • நீங்கள் பயன்படுத்த விரும்பும் Google கணக்கைத் தேர்வு செய்யவும்.
  • Join meeting என்பதை Click செய்யவும் . உங்கள் சந்திப்பில் மற்றவர்களையும் சேர்க்கும் திறன் உங்களுக்கு இருக்கும்.

இனி நீங்கள் மகிழ்ச்சியாக Google அழைப்பில் Video அழைப்புக்களை மேற்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.