எல்லாத் துறைகளிலும் தொழில் நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தற்காலத் தொழில் நுட்ப உலகில் “முடியாது” என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. அந்த வகையில் எந்தத் துறையாக இருப்பினும் எமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்வதற்கு Google தேடுபொறி மிகவும் உதவியாக அமைகின்றது. Google தேடுபொறியினையும் Hack செய்ய முடியுமா? என்னும் கேள்வி எழுகின்றது. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தற்காலத்தில் Hack செய்யவும் முடியும்; Hack செய்பவர்களைக் கண்டறிந்து கொள்ளவும் முடியும்.

ஆகவே Google தேடு பொறியினைக் Hack செய்ய முடியும். Google தேடு பொறியினைக் Hack செய்வதால் உங்களுக்கு எதுவிதப் பயனும் கிடைக்கப் போவதில்லை. இவை தொழில்நுட்ப உலகில் பயனற்ற முயற்சிகள் என்றே கூற வேண்டும்.

Search Engine பாவனை சிறப்பாக அமைய வேண்டுமெனின் அதற்கு சிறப்பான Data Library இன் Back-Up வேண்டும். தற்காலக் கல்வி உலகில் எம்மிடமுள்ள தகவல்களை ஒருவருக்கொருவர் தொடர்புபடுத்தினால் மாத்திரமே தேடுபொறியினூடாக தேடல்களை மேற்கொள்பவர்களுக்கு தமது தேடல்களுக்கான பதில்களை இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும். Bing எனப்படுகின்ற தேடுபொறியானது தன்னிடம் இல்லாத தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு Shortcut இனைப் பயன்படுத்தியது. Bing தன்னிடமில்லாத தகவல்களை Google தேடுபொறியிலிருந்து நேரடியாகத் தரவிறக்கம் செய்து Bing வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. Google தேடுபொறியினை பலரும் பயன்படுத்துகின்ற காரணத்தினால் Bing தேடுபொறியின் இச் செயற்பாட்டினைக் கண்டறிந்து கொள்வது Google நிறுவனத்திற்கு மிகவும்  கடினமான செயலாகக் காணப்பட்டது.

Bing தேடுபொறியானது Google தேடுபொறி மூலமாக தமது  வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை வழங்கிக் கொண்டிருப்பதனை அறிந்து கொண்ட Google நிறுவனம் இதனை முடிவிற்கு கொண்டு வருவதற்குத் தீர்மானித்தது. இதற்கென Fake Subject Matter ஒன்றினைத் தானாக உருவாக்கியது. அதன் விபரங்களை Public domain இல் பாதுகாத்து வைத்திருந்தது. Google தேடுபொறி தான் உருவாக்கிய Fake Subject Matter இன் பல பரிணாமங்களை Bing தேடுபொறி மூலமாக தேடுதலை மேற்கொண்டது. Fake Subject Matter பற்றிய Fake Search இற்கு உரிய பதில் கிடைத்தது. இதன் பின்னர் இரு தரப்பினரும் கலந்துரையாடலை மேற்கொண்டு இந்த விடயத்தினை நிறைவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.