• உங்களுக்கு வரவேண்டிய நிலுவையில் உள்ள பணத்தினை வங்கியில்  தக்க ஆவணங்களுடன் சமர்ப்பித்து நீங்கள் அதன் மூலம்  கடன் பெறலாம்.

உங்களுக்கு சேர வேண்டிய நிலுவையிலுள்ள பணத்தினை தக்க ஆவணங்களுடன் வங்கியில் சமர்ப்பித்து உங்களது நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான பணத்தினை வங்கிக் கடன் மூலம் பெற்று பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.

 • உங்கள் வாடிக்கையாளர்களுக்கு (Customer) எவ்வாறு மேலும் சிறந்த சேவை அளிக்க முடியும் என்று முயற்சி செய்யுங்கள்.

உங்களை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு உங்களால் எவ்வாறு சிறந்த சேவையை அளிக்க முடியும் என்பதை தீர்மானித்து அதனை திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.

 • வாடிக்கையாளர்களுக்கு மேலும் தேவைப்படும்  சேவை (Service) மற்றும் பொருள்கள் (Product) என்பவற்றை அறிந்து  வழங்குங்கள்.

உங்களைச் சார்ந்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் உங்கள் நிறுவனத்தின் சேவைகள் பற்றிய பின்னூட்டலைப் பெற்றுக்கொண்டு அவர்கள் தேவையெனக் கருதும் சேவை மற்றும் பொருட்களை அவர்களின் விருப்பத்திற்குத் தகுந்த வகையில் வழங்குங்கள்.

 • உங்கள் ஊழியர்களை (Employees) சரியான இடைவெளியில் பயிற்சியளியுங்கள்.

உங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்கும் போது அவர்களது திறமையினை அறிந்து நீங்கள் அவர்களுக்கு வழங்கும் வேலைக்கு ஏற்ப சரியான பயிற்சியினை வழங்குங்கள்.

 • நீங்கள் சார்ந்த துறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில் நுட்பங்களை (Technology) உங்கள் பொருள்களில் புகுத்துங்கள்.

நீங்கள் செயற்படும் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்களை இனங்கண்டு அத் தொழில்நுட்பங்களை உங்கள் துறையில் பயன்படுத்துவதற்கு தேவையான வழிகளை திட்டமிட்டு செயற்படுத்துங்கள்.

 • அனைத்து வேலைகளையும் நீங்கள் உங்கள் தலையில் போட்டுக்கொண்டு செய்யாதீர்கள். தொழிலின் முக்கிய அம்சங்களை விட்டுவிட்டு மற்றவற்றை அவுட் சோர்ஸ் (Outsource) செய்யுங்கள்.

உங்களுக்கு குறிக்கப்பட்ட செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்வதற்குத் திட்டமிடுங்கள். ஏனைய செயற்பாடுகளை பகிர்ந்து செய்வதற்குப் பழகிக் கொள்ளுங்கள். அத்துடன் தொழிலுக்குத் தேவையான முக்கிய அம்சங்களை மாத்திரம் கொண்டு சிந்தித்து செயற்படுங்கள்.

 • நிறுவனத்தில் சிறப்பாக வேலை செய்பவர்களுக்கு பரிசுகள் வழங்குங்கள்.

உங்கள் நிறுவனத்திற்காக சிறந்த சேவையாற்றுபவர்களுக்கு அவர்களது சேவையைப் பாராட்டி பரிசில்கள் வழங்குங்கள். இதன் மூலம் அவர்களும் திருப்திப்படுவதோடு தமது சேவையை மேலும் சிறப்புடன் வழங்குவார்கள்.

 • நிறுவனத்தை மேம்படுத்த தேவையான மென்பொருள்களை (Software) நிறுவுங்கள்.

உங்கள் நிறுவனத்தினை மேம்படுத்தி முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய மென்பொருள்களை நிறுவி அதனை தகுந்த விதத்தில் திட்டமிட்டு செயற்படுத்துங்கள்.

 • உங்கள் நிறுவனத்தின் இணையத்தளத்தை மேம்படுத்துங்கள். அதில் enquiry, live chat போன்றவற்றை உருவாக்குங்கள்.

உங்கள் நிறுவனத்திற்கென தனிதத்துவமான ரீதியில் செயற்படுத்தப்படும் இணையத்தளத்தினை மேம்படுத்தி அதில் enquiry, live chat போன்றவற்றை உருவாக்கி மக்களின் பார்வையை உங்கள் பக்கம் ஈர்க்க வழிகளை ஏற்படுத்துங்கள்.

 • உங்கள் வாடிக்கையாளர்கள் (customer) கொடுக்கும் புகார்கள், சந்தேகங்களுக்கு உடனே தீர்வு காணுங்கள்.

உங்களது வாடிக்கையாளர் சேவையின் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கி உடன் தீர்வு காணுங்கள்.

 • உங்களுடைய ஊழியர்களிடம் புதிய யோசனைகளைக் (idea) கேளுங்கள்.

உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் உங்கள் நிறுவனத்தை முன்னேற்றுவதற்குரிய யோசனைகளை கலந்துரையாடல்கள் மேற்கொண்டு அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

 • ஏதேனும் புதிய விடயங்களை உங்கள் தொழிலில் செயற்படுத்திப் பாருங்கள்.

நீங்கள் உங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டுமாயின் வழமையாக மேற்கொண்டுவரும் செயற்பாடுகளுக்கு மாற்றீடாக புதிய விடயங்களை இனங்கண்டு அவற்றை செயற்படுத்துங்கள்.

 • உங்கள் நிறுவனத்திற்கு Facebook ல் ஒரு பக்கத்தை (FB page) தயார் செய்யுங்கள். அதில் அடிக்கடி நிறுவனத்தை பற்றிய தகவல்களை பகிருங்கள் (post sharing). வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருங்கள்.

உங்கள் நிறுவனத்திற்கென்று தனித்துவமான Facebook Page இனை உருவாக்கி அதில் உங்கள் நிறுவனம் பற்றிய தகவல்கள், உங்கள் நிறுவனத்தின் ஆரம்பம் என்பவற்றைப் பதிவிட்டு வாடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

 • உங்கள் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்கள் (machines) மற்றும் சாதனங்கள் (equipment) மேலும் சிறப்பாக செயற்பட மற்றும் சக்தியை குறைவாக செலவழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்.

உங்கள் நிறுவனத்தில் செயற்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் சாதனங்களை வினைத்திறனான வகையில் பயன்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதற்காக அவற்றைப் பரிசீலனைக்கு உட்படுத்தி அவற்றின் செயற்பாட்டுத்தன்மையை இனங்கண்டு குறைந்த சக்தியைப் பயன்படுத்தி அதிக பயனைத் தரக்கூடிய வகையில் மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.

 • உங்கள் துறை சார்ந்த, உங்கள் போட்டியாளர்களாக இல்லாதவர்களிடம் இணைந்து வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களைப் பெறுங்கள்.

நீங்கள் ஈடுபடும் துறையிலுள்ள, உங்களுக்குப் போட்டியாளர்களாக செயற்படாதவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுடன் இணைந்து உங்கள் தொழிலுக்குத் தேவையான வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பெறுங்கள்.

 • உங்கள் வளர்ச்சி குறித்து நீங்கள் சேமிப்பிலீடுபடும் வங்கிக்கு தகவல் கொடுங்கள்.

உங்களுடைய நிறுவனத்தின் வளர்ச்சியினை நீங்கள் சேமிப்பிலீடுபடும் வங்கியிடம் சமர்ப்பிப்பதன் மூலம் குறித்த வங்கியிடமிருந்து பல சலுகைகளைப் பெற்றுக் கொண்டு மேலும் உங்கள் நிறுவனத்தை முன்னேற்றுங்கள்.

 • உங்கள் நிறுவனத்தின் அடுத்த 5 ஆண்டுக்கான இலக்குகளை இப்போதே முடிவு செய்யுங்கள்.

உங்கள் நிறுவனத்தின் மூலம் செயற்படுத்தப்படும் செயற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டு 5 ஆண்டில் நீங்கள் பெற நினைக்கும் இலக்குகளை ஆராய்ந்தறிந்து கொள்ளுங்கள்.

 • உங்கள் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்ட வகையில் அமைய சட்டப் புத்தகம் அல்லது ஒரு கலாசாரத்தை உருவாக்குங்கள்.

உங்கள் நிறுவனத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்டு உங்கள் நிறுவனம் வளர்ச்சியடைய வேண்டுமாயின் அதற்கென திட்டமிடப்பட்ட சட்டப் புத்தகம் அல்லது ஒரு கலாசாரத்தை உருவாக்கி அதனை செயற்படுத்துங்கள்.

 • உங்கள் நிறுவனத்தை எங்கிருந்தும் கண்காணிக்கத் தேவையான மென்பொருளை நிறுவுங்கள். (Cloud Computing)

உங்கள் நிறுவனத்தில் இடம்பெறும் பணிகளைக் கண்காணித்துக் கொள்வதற்குத் தேவையான மென்பொருளினை உருவாக்கி நீங்கள் எங்கிருந்தாலும் நிறுவனத்தைக் கண்காணித்து ஆலோசனைகளை வழங்கும் சந்தர்ப்பத்தைப் பெறுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.