செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கு Viber, Imo, Messenger போன்ற பல செயலிகள் காணப்படுவது போல WhatsApp செயலியும் தகவல்களைப் பரிமாறிட உதவுகின்றது. WhatsApp செயலியின் மூலமாக உங்களது நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு செய்திகளை அனுப்பும் போது நீங்கள் அதனை பார்வையிடுவதற்கு முன் அவர்கள் நீக்கிவிட்டால் (Delete For All) அந்த செய்தியை நீங்கள் மீண்டும் பார்வையிட முடியும். Delete செய்யப்பட்ட செய்திகளை நீங்கள் பார்ப்பதற்கு சில மூன்றாம் தரப்பு செயலிகள் (Third Party App) உங்களுக்கு உதவுகின்றன.

WAMR செயலியானது மிகவும் எளிமையாகக் காணப்படுவதுடன்; இதனை இலகுவாக உபயோகித்துக் கொள்ளவும் முடியும். இதில் WhatsApp மட்டுமல்லாது Instagram,  Facebook, Twitter போன்ற செயலிகளில் Delete செய்யப்படும் செய்திகளையும்  உங்களால் மீண்டும் பார்வையிட முடியும். WAMR மூலமாக Delete செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற அனைத்து விதமான கோப்புக்களையும் மீளவும் பார்வையிட்டுக்கொள்ள முடியும்.

WAMR செயலியில் காணப்படுகின்ற நீக்கப்பட்ட செய்தி பற்றிய அறிவிப்பினைக் (Notification) Click செய்து நீங்கள் உள் நுழையும் போது; உங்களுக்கு பிறர் அனுப்பி அவர்கள் Delete செய்த செய்திகளைப் பற்றிய முழு விபரத்தினையும் பார்வையிட முடியும். WAMR செயலியினை Google Play Store இன் மூலம் உங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். “WAMR” செயலிகளைப் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலமாக உங்களுக்கு WhatsApp இல் உங்கள் நண்பர்கள், பிறரால் அனுப்பி Delete செய்யப்பட்ட செய்திகளை இலகுவாக பார்வையிட்டுக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.