உளவியல் என்பது மனதின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்வதாகும். இந்த உளவியலின் அடிப்படையில் மனித மனதினை ஆய்வு செய்து உளவியலாளர்கள் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். அதனடிப்படையில்;
- ஒருவரை நீங்கள் சந்திக்கச் செல்லும் போது உங்களை சந்திக்கும் அந்த நபர் முதலில் நீங்கள் அணிந்திருக்கும் காலணிகளையே பார்ப்பார். இதனை வைத்தே உங்களை அவர் மதிப்பிட்டுக் கொள்வார் என உளவியல் கூறுகின்றது.
- அலுவலகக் கூட்டங்களின் போது உங்கள் மேலாளரின் கண்டிப்பிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள வேண்டுமாயின் அவரது ஆசனத்திற்கு அருகில் நீங்கள் அமர வேண்டும். ஏனெனில் நமது மனமானது எமக்கு எதிரில் இருப்பவர் மேலேயே அதிக கவனத்தைச் செலுத்துவதாக அமையும்.
- உளவியல் உண்மையின் படி சிகப்பு நிற ஆடைகள் அணியும் பெண்களும், நீல நிற ஆடைகள் அணிகின்ற ஆண்களுமே அதிகமாக எதிர்பாலினத்தவரை ஈர்ப்பதாக அமைகின்றது.
- தொடர்ச்சியாக 66 முறைகள் ஒரே பழக்கத்தினைச் செய்யும் போது அதுவே உங்கள் பழக்கமாக மாறிவிடுகின்றது. பழக்கவழக்கங்களே நமது வாழ்க்கையினைத் தீர்மானிக்கின்றன.
- ஒரு முக்கிய பணியில் நீங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அதனுடன் தொடர்பற்ற சிந்தனைகள் நம்மை வந்து சூழும். சான்றாக பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் சில வேளைகளில் சினிமாப் பாடல் வரிகள் நமது நினைவிற்கு வருகின்றன. அந்த நேரத்தில் அந்தப் பாடலின் இறுதி வரிகளைப் பற்றி சிந்திக்கும் போது இயல்பாகவே அந்தப் பாடல் நமது சிந்தனையிலிருந்து விலகிவிடும்.
- நீங்கள் இரசிக்கும் இசையானது உலகத்தின் மீதான உங்கள் பார்வையை மாற்றுகின்ற சக்தி மிக்கது.
- நீங்கள் 8 வாரங்கள் தொடர்ச்சியாக தியானம் செய்யும் போது மூளையின் கற்றல் தொடர்பிலான பகுதி (Grey Matter) அதிக வளர்ச்சியடைகின்றது.
- தகுந்த நேரத்திற்கு தூக்கத்திற்குச் செல்லாமை, ஒழுங்காக உணவு வேளைகளைப் பின்பற்றாமை ஆகிய இரண்டுமே கோபத்திற்கான மிக முக்கிய இரு காரணிகளாகக் காணப்படுகின்றன.
- நாம் அணிகின்ற ஆடைகளே எமது நடத்தைகளைத் தீர்மானிக்கின்றன.
- பற்களுக்கு இடையில் பேனாவினை வைப்பதன் மூலம் மூளைக்கு மகிழ்ச்சியான உணர்வினைக் கொடுக்க முடியும்.
- நறுமணம் தரும் வாசனைத் திரவியங்களை உபயோகிப்பவர்களை நுகருகின்ற போது எம்மை அறியாமலேயே அவர்களின் மீது ஈர்ப்பு உருவாகிவிடும்.
- ஒரு ஆண் அவரது அம்மாவின் உடல் எலும்பு அமைப்பினையொத்த பெண்களினால் அதிகமாக கவரப்படுகின்றார்.
- மனதில் அதிகமான சிந்தனைகளை வைத்துக்கொண்டு உறக்கத்திற்குச் செல்லும் போது நமது மூளை நாம் விழித்திருப்பதாகவே எண்ணுகின்றது. இதனாலேயே நாம் உறக்கத்திலிருந்து விழித்தெழும் போது சோர்வுடன் இருப்பதாகக் உணர்கின்றோம்.
- ஆண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 12,500 சொற்களையும், பெண்கள் 22,000 சொற்களையும் பேசுகின்றனர்.
- ஒருவர் உணவருந்துகின்ற நேரத்தில் எதாவது ஒரு பொருளோ அல்லது நபரோ அறிமுகமாகினால் அதன் மீது சிறப்பு அபிப்பிராயம் உருவாகின்றது.
- மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வண்ணங்கள் பசியினைத் தூண்டக்கூடிய ஆற்றலுடையவை. ஆகையினாலேயே பெரும்பாலான உணவகங்கள் இந்த நிறங்களில் அமைகின்றன.
- ஒரே விடயத்தில் 20 நிமிடங்களுக்கு மேலதிகமாக கவனத்தினைச் செலுத்திக் கொண்டிருக்க முடியாது.
- குழுவாக இணைந்து மனிதர்கள் பேசும் போது 80% ஆனவை குறைகளுடன் தொடர்புடையதாகவே காணப்படும்.
- உங்களுக்கு ஒரு நபரை பிடித்திருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் ஏதும் தவறிழைத்து அவர் மேல் நீங்கள் கோபம் கொள்ளும் போது அந்த கோபம் மூன்று நாட்களுக்கு மேலாக நீடிக்காது. அவ்வாறு அந்த கோபம் நீடித்தால் அவர் மீது உங்களுக்கு அன்பு இல்லை என்றே கூற வேண்டும்.
- உங்களை யாராவது கவனித்துக்கொண்டிருக்கின்றார்களா என்பதை நீங்கள் இலகுவாகத் தெரிந்து கொள்வதற்கு கொட்டாவி விடுங்கள். ஏனெனில் யாரும் கொட்டாவி விடுவதைப் பார்க்கும் போது அல்லது நினைக்கும் போது நிச்சயமாக அந்த நபருக்கும் கொட்டாவி வந்துவிடும்.
- நீங்கள் கோபமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் எண்களை இறங்கு வரிசையில் எண்ணும் போது (10,9,8,7…) கோபத்தின் வீரியம் குறைவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.