1. நேரத்தை கையாள்வதற்கு முன்பு மனதினைக் கையாள்வது அவசியமாகும். ஏனெனில் மனதினை ஒருமைப்படுத்துவதன் மூலமே நேரத்தை கையாள முடியும்.
 1. நம்முள் நல்ல கருத்துக்களை மனதில் பதிப்பதன் மூலம் மனதிற்கு வலுச்சேர்க்க முடியும். நல்ல கருத்துக்களை நாம் சிறந்த புத்தகங்களை வாசிப்பதனூடாக மனதில் பதித்துக் கொள்ளலாம்.
 1. சிந்தனைகளை ஒருமுகப்படுத்திய பின்னர் நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் செயல்களில் கவனம் செலுத்துங்கள். உங்களது சிந்தனைகளே செயல்களாக செயற்படுத்தப்படுகின்றன.
 1. செயல்களில் உங்கள் கவனத்தைச் செலுத்தும் போது அச் செயல்களை தினமும் மேற்கொள்ளும் செயல்கள் மற்றும் எப்போதாவது மேற்கொள்ளும் செயல்கள் என பகுத்தறிந்து கொள்ளுங்கள்.
 1. நீங்கள் தினமும் மேற்கொள்ளும் செயல்களே உங்களுடைய வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை நிர்ணயிக்கின்றன.
 1. நேர முகாமைத்துவத்தின் அடிப்படையில் உங்களது நாளாந்த செயல்களை மேற்கொள்வதன் மூலம் உங்களுடைய வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
 1. முன்கூட்டியே மறுநாளுக்குரிய செயல்களை திட்டமிட்டு அட்டவணைப்படுத்துவதன் மூலம் நேரமுகாமைத்துவத்தை மேற்கொள்ளுங்கள்.
 1. மறுநாளுக்குரிய செயல்களை செயன்முறைப்படம் மூலம் திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள்.
 1. குறிக்கோள்களை அடைவதற்கான காலத்தை தீர்மானிக்காவிட்டால் அக் குறிக்கோளினை இறுதிவரை அடைய முடியாது. எனவே உங்களுடைய குறிக்கோள்களை நிர்ணயித்து அதனை அடைவதற்கான காலத்தையும் வரையறுத்துக் கொள்வது சிறந்தது.
 1. முதன்மையாக மேற்கொள்ள வேண்டிய செயல்களை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ளுங்கள். எத்தகைய செயலினை நீங்கள் மேற்கொள்ளாது விடின் அதிக பாதிப்பினை உண்டாக்குமோ அந்த செயலினை முதலாவதாக மேற்கொள்ளுங்கள்.
 1. தேவையற்ற செயல்களை மேற்கொள்வதால் இருமடங்கான நேரம் வீணாகின்றது. எனவே இதனால் தேவையான செயல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு தவறவிடப்படுகின்றது.
 1. குறுங்கால குறிக்கோளாயின் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் அது அடையப்பெற்றமையினை உணருங்கள் அவ்வாறு அந்த இலக்கு அடையப்பெறாவிட்டால் அதற்கான காரணத்தினை அறிய நீங்களே உங்களை பகுப்பாய்வு செய்யுங்கள்.
 1. குறிக்கோள்களை அடைவதற்கான காலத்தை தீர்மானிக்கும் போது அக்குறிக்கோள்களை நாம் சாதாரணமாக அடையக்கூடிய காலத்தை விட குறைவாக தெரிவு செய்து கொள்ளுங்கள்.
 1. தினசரி நாளின் இறுதியில் அந்நாளுக்குரிய செயல்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமையினை மதிப்பீடு செய்வதோடு; மறுநாளை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
 1. இந்நாளின் இந்த நொடியை முறையாக பயன்படுத்துவதன் மூலம் மறுநாள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறை செய்வதனால் மறுநாளைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
 1. இன்றைய நாளின் நேரத்தை நாம் எப்படி பயன்படுத்துகின்றோம் என்பதன் மூலமே எதிர்காலத்தினை சிறப்புடையதாக திட்டமிட முடியும்.

இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளவதன் மூலம். நேரத்தினை சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.