நவீன யுகத்தில் நமது வாழ்க்கையுடன் தொடர்புபட்டதாக Facebook காணப்படுகின்றது என்பது உண்மையே. ஒரு நாளில் குறைந்தது ஒரு மணி நேரத்தினையாவது நாம் Facebook பார்ப்பதற்கு செலவு செய்கின்றோம். பெரும்பாலானவர்கள் அன்றாட வாழ்வில் பொழுதுபோக்கிற்காக Facebook பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதுடன்; தங்களது புகைப்படங்களை அதில் பதிவேற்றுவதற்கும், அதிகம் பிடித்த தகவல்களைப் பகிர்வதற்கும், மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் அதிகம் Facebook இனை விரும்புகின்றனர். Facebook மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?

Facebook மூலமாக எவ்வித முதலீடுகளுமின்றி பணத்தினைச் சம்பாதித்துக் கொள்ள முடியும். இதற்கு உங்களது நேரமும், உழைப்பும் அவசியமாகத் தேவைப்படுகின்றது. நீங்கள் Facebook மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது Facebook கணக்கொன்றினை ஆரம்பிக்க வேண்டும். அதன் பிற்பாடு உங்களுக்குப் பிடித்த துறையினை தேர்ந்தெடுக்க வேண்டும். சான்றாக விளையாட்டு, சினிமா, அரசியல் போன்ற துறைகளில் ஏதாவதொன்றினை தெரிவுசெய்து கொள்ளலாம். நீங்கள் தெரிவுசெய்து கொண்ட துறையிலுள்ள அனைவரையும் கவரக் கூடிய உள்ளடக்கங்களை (Content) உங்கள் Facebook பக்கத்தில் பதிவிட வேண்டும். நீங்கள் பதிவிடுகின்ற ஒவ்வொரு தகவல்களும் பிறரைச் சென்றடைவதுடன், அவர்கள் அதைப் பகிரும் வகையிலமைந்த சிறப்பான உள்ளடக்கங்களை காணொளிகள், மீம்ஸ், புகைப்படங்கள் மூலமாக நீங்கள் பதிவிட வேண்டும். இதனை மேற்கொள்வதன் மூலமாகவே பலர் உங்கள் Facebook பக்கத்தினை பின்தொடர்வதற்குரிய சந்தர்ப்பங்களை உருவாக்க முடியும்.

உங்களது Facebook பக்கத்தில் Followersகளை அதிகமாகப் பெற்றுக் கொண்ட பின்னர் Amazon, ShareAsale, Clickbank, Cuelinks போன்ற பிரபல தளங்களில் விண்ணப்பித்து Affiliate Marketing மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும். Affiliate Marketing மூலமாக உங்கள் Facebook பக்கத்தில் பொருட்களை சலுகை விலையில் விற்று அதில் கிடைக்கும் Commission மூலமாக பணம் சம்பாதிக்க முடியும். இதற்காக நீங்கள் உங்கள் Facebook page இல் காணப்படும் Offers பகுதியில் நீங்கள் பதிவு செய்த E – commerce தளத்தின் Link இனைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். நீங்கள் பதிவேற்றம் செய்த Link இனைக் Click செய்து அதிலுள்ள பொருட்களை ஒருவர் கொள்வனவு செய்யும் போது உங்களுக்கு குறிப்பிட்டளவு பணம் கிடைக்கும்.

Brand ஒன்றினைப் பிரபலப்படுத்துவதற்கு அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க உங்கள் Facebook பக்கத்தில் அந்த Brand பற்றிய பதிவுகளை (Sponsored Post) நீங்கள் பதிவிட முடியும். இதற்கென நீங்கள் அந்த Brand இடமிருந்து பணத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். Sponsored Post மூலமாகவும் நீங்கள் வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாது உங்கள் Facebook பக்கத்தினை நல்ல விலைக்கு விற்கவும் முடியும். நீங்கள் அதிக Followers களை உங்கள் Facebook பக்கத்தில் கொண்டிருந்தால் உங்கள் துறையில் புதிதாக இணையும் நிறுவனங்கள் உங்கள் Facebook பக்கத்தினை வாங்குவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. நிறுவனங்கள் Facebook பக்கமொன்றினை ஆரம்பித்து அதில் அதிக Followers களை உடனடியாகச் சேர்ப்பதென்பது இயலாத காரியம். எனவே தான் அவர்கள் பிறரால் ஆரம்பிக்கப்பட்டு அதிக Followersகளைக் கொண்ட Facebook பக்கங்களை விலைக்கு வாங்கிக் கொள்கின்றன. ஆகவே இதன் மூலமாகவும் பணத்தைச் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இத்தகைய பல வழிகளின் மூலமாக Facebook மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டிருப்பீர்கள். எதிலும் முயாதது என்று ஒன்றும் இல்லை. நீங்களும் முயற்சி செய்து Facebook மூலம் பணம் சம்பாதித்துக் கொள்வதற்கான செயற்பாடுகளைச் செயற்படுத்துங்கள்.

இனிவரும் காலங்களில் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் அதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாக பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.