நீங்கள் எங்கு எல்லாம் செல்கிறீர்கள் என்பதனை Facebook அறிந்து வைத்துள்ளது என்பதை உங்களால் நம்பமுடியுமாக உள்ளதா?முடியாது என்றால் நம்புங்கள் அதுதான் உண்மை. பயனர்களிடம் இருந்து வரும் புகாரினை ஒத்துக்கொள்ளாத Facebook தற்போது அதிகாரப்பூர்வமாக இதனை ஒத்துக்கொண்டுள்ளது.
இதன் சுவாரிஸ்யம் என்னவென்றால் உங்கள் கையடைக்கத்தொலைபேசியினால் நீங்கள் இருக்கும் இடத்தினை இலகுவாக அறிந்துகொள்ள முடியும்.இதனை பயன்படுத்தி Facebook நீங்கள் இருக்கும் இடத்தினை அறிந்துகொள்ளும். தற்போது இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்காக எமது கையடக்க தொலைபேசிகளில் உள்ள இருப்பிடத்தை வெளிப்படுத்தும் முறைகளை முடக்குவதற்கான செயற்பாடுகளை நாம் நிறுத்தி வைத்தாலும் Facebook அதனை தெரிந்து கொள்ளும் என்பது உங்களுக்கு எவ்வாறு உள்ளது!!!
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர் அலெக்ஸாண்ட்ரா கொரோலோவாவின் விரிவான அறிக்கையைத் தொடர்ந்து, உண்மையில் பயனர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றதா? என்பது குறித்து அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் சமூக ஊடக நிறுவனங்களிடமிருந்து கேள்விகளை கேட்டு வருகின்றனர். ஆனால் இவ்வாறான,கருத்துக்களை Facebook ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு , Facebook நிறுவனம் மக்களின் இருப்பிடத்தை எங்களால் கண்காணிக்க முடியும் என்று ஒப்புக் கொண்டுள்ளது.
GPS செயற்பாடுகளை நிறுத்தி வைத்தாலும், முகப்புத்தகம் எவ்வாறு உங்கள் நடவடிக்கைகளை கண்காணிக்கும் என்பதை இவ்வாறு தெரிந்து கொள்ளுங்கள்.
உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை பயனர்கள் டேக்(Tag) செய்வதாலும் மற்றும் செக்-இன்ஸை(check ins) பகுப்பாய்வு செய்வதன் மூலமாகவும் அந்த தகவலைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறிகின்றனர். பயனர்கள் Facebook ன் shopping பிரிவில் பொருள்களை வாங்குவதற்காக முகவரியைப் பகிரும்போது அல்லது அவர்களின் சுயவிபரத்தகவலில் கூட இருப்பிடத் தகவலைப் பெறுவதாக நிறுவனம் கூறியுள்ளது.