தற்போதைய நாட்டு நிலைமை காரணமாக எல்லா வகையான வேலைகளையும் நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தீர்த்து வைக்கும் வகையில் பல நிறுவனங்கள் தங்களது பங்களிப்பைக் கொடுத்து வருகின்றனர். இந்த வகையில் LINKEDIN நிறுவனம் தங்களது பங்களிப்பையும் கொடுத்துள்ளது.
உலகில் முன்னணி Online வேலைத்தேடல் நிறுவனமான linkedIn நிறுவனம் அவர்களது புதிய வெளியீடான LinkedIn Live-ஐ அறிமுகம் செய்துள்ளது. இது LinkedIn பயனர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் Virtual நிகழ்வுகளை நடத்த முடிவதுடன், நிறுவனங்கள் நிகழ்நிலை முறையில் தொடர்புகளையும் ஏற்படுத்த முடியும்.
அத்துடன் நேரடி ஒளிபரப்புக்களைச் செய்ய முடியும். குறித்த வசதிகள் LinkedIn-Live மற்றும் LinkedIn-Event என்று அழைக்கப்படும்.