Bryan Johnson உடைய Kernel நிறுவனம் (Bryan Johnson’s firm, Kernel), மூளையில் பொருத்தப்படும் ஒரு Microchip இனை (Brain Chip – Micro) உருவாக்கி வருகின்றது.  இந்த‌ chip களை வைத்து மக்களை வேண்டுமென்றபோது நினைவுகளை வாங்கவும், அழிக்கவும் அனுமதிக்கும். பணக்காரர்களுக்கென்று மாத்திரம் ஒதுக்கப்படாமல், இந்த‌ Chip கள் smartphone களை போலவே அனைவரும்’ பெறமுடியும் என‌ Bryan Johnson கூறுகிறார்.

நீங்கள் மூளையில் சேமித்த‌ நினைவுகளை அழிக்கவும் மற்றும் நோய்களை எதிர்த்து போராடவும் செய்ய‌ வைக்கின்ற‌ Brain Chip இன்னும் 15 ஆண்டுகளில் Super Hero களின்  ஒரு புதிய இனத்தை உருவாக்க உள்ளது. மனித மூளையில் இந்த Microchip களை பொருத்துவதன் மூலம் மனிதனின் செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்று Kernel நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மனித மருத்துவ பயன்பாட்டிற்காக‌, மூளையில் பொருத்தப்படும் சாதனங்களின் முன்மாதிரிகளை Kernel தற்போது செய்து வருகிறது. வலிப்பு நோயாளிகளுடன் சோதனைகள் நடத்தி நல்ல ஆரம்ப முடிவுகளை பெற்றுள்ளது.மேலும் இந்த‌ Chip களை பொருத்தும் தொழில் நுட்பத்தினை வ‌ணிகமயமாக்கும் (Brain Chip Implant Technology) நோக்கத்துடன் முன்னோக்கி செல்ல உள்ளதாகவும் , ஆரோக்கியமான மக்களிடம் சென்றடையும் முன்னர் , Alzheimer போன்ற மூளைச் சிதைவு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களில் நினைவகத்தை மேம்படுத்துவதற்கு இந்த‌ Chip கள்  ப‌யன்படுத்தப்படுமென நம்புவதாக‌  Bryan Johnson கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.