P.C.R பரிசோதனை என்றால் என்ன? 

P.C.R என்பதன் விரிவான பொருள் “Polymerase Chain Reaction” ஆகும். P.C.R பரிசோதனை என்பது D.N.A (டியோக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலம்) அல்லது மனிதர்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் மற்றும் சில வைரஸ்களின் மரபணுக்களின் அடிப்படை மற்றும் முக்கியமான அங்கத்தை நகலெடுக்கும் ஒரு பரிசோதனை முறையாகும்.

P.C.R பரிசோதனை மேற்கொள்வதற்கான காரணம் என்ன?

P.C.R பரிசோதனை மேற்கொள்வதன் காரணம் வேறுபடுத்தி அடையாளம் காண்பதற்காகும். மரபணுக்கள் ஒருவருக்கொருவர் மாறுபடுகின்றது. பெற்றோரை அடையாளம் காண, ஒரு குற்றத்தில் குற்றவாளியை அடையாளம் காண D.N.A பரிசோதனை மூலமாக மட்டுமன்றி P.C.R பரிசோதனை மூலமாகவும்  இனங்கண்டுகொள்ள முடியும். P.C.R பரிசோதனையை D.N.A கொண்ட உயிரினங்களில் மாத்திரமே செய்ய முடியும். மரபணுக்களும் அவற்றில் உள்ள Nucleic அமிலங்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதைப் போல, உயிரினங்களுக்கும் மரபணுக்களும் அவற்றில் உள்ள நியூக்ளிக் அமிலங்களும் வேறுபடுகின்றன.  எனவே நோய்க்கிருமி இனங்களை அடையாளம் காண P.C.R பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

Covid 19 இற்கு P.C.R பரிசோதனை செய்யப்படுவதற்கான காரணம் என்ன?

Covid 19 இனை அடையாளம் காண்பதற்காக R.N.A நகலெடுக்கப்பட்டு அடையாளம் காண D.N.A இல் மொழிபெயர்க்கப்பட வேண்டும். பின்னர் P.C.R பரிசோதனை செய்ய முடியும். இதற்கு Reverse transcriptase எனப்படும் நொதி பயன்படுத்தப்படுகின்றது. இது R.N.A உடன் ஒத்த D.N.A இனை உருவாக்குகின்றது. இது நிறைவடைந்ததும் P.C.R இனை எதிர்வினை செய்து அடையாளம் காணலாம். கோவிட் 19 வைரஸ் மரபணுக்களில் R.N.A எனப்படும் Nucleic அமிலம் உள்ளது.

P.C.R பரிசோதனை முடிவுகளை வழங்குவதற்காக தேவைப்படும் நேர அளவு எவ்வளவு?

P.C.R பரிசோதனையினை மேற்கொண்டு முடிவுகளை பெறுவதற்கு குறைந்தது 18 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றது. இருப்பினும் 6 மணித்தியாலங்களில் P.C.R பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். இது “Real Time P.C.R” என்று அழைக்கப்படுகின்றது. நகலெடுக்கப்பட்ட D.N.A மூலக்கூறுகளும் Electrophoresis இற்கு பரிசோதிக்கப்பட வேண்டும். நிகழ்நேர P.C.R பரிசோதனையில் D.N.A  மூலக்கூறுகளும் நகலெடுக்கும் நேரத்தில் அடையாளம் காணப்படுகின்றன. இதனால் குறுகிய காலத்தில் முடிவுகளைப் பெறலாம். Covid 19 இற்கான பரிசோதனையை “# Covid_19_Reverse_Transcriptase_Real_Time_PCR” என்று அழைக்க முடியும்.

இலங்கையில் கோவிட் 19 Reverse transcriptase real time P.C.R பரிசோதனை மேற்கொள்வது எவ்வாறு?

Covid 19 தொற்று ஏற்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படும் நோயாளியின் தொண்டை மற்றும் காற்றுப்பாதையில் இருந்து துணியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு மாதிரியினால் இப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.  வைரஸ் முக்கியமாக இந்த இடத்தில் சேமிக்கப்படுவதனால் அந்த மாதிரியில் உள்ள வைரஸ் மட்டுமே மரபணு பண்புகளை பெற முடியும்.

சாதாரண விஞ்ஞான ஆய்வுகூடங்களில் இப் பரிசோதனையினை மேற்கொள்ள முடியாது. சகல வசதிகளும் கொண்ட சிறப்பு ஆய்வகங்கள் மூலாகவே P.C.R பரிசோதனையினை மேற்கொள்ள முடியும். இலங்கையில்   மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், Teaching Hospital Karapitiya மற்றும் National Hospital Kandy போன்ற இடங்களில்  P.C.R பரிசோதனையை மேற்கொள்வதற்கான ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

P.C.R பரிசோதனையை மேற்கொள்ள தகுந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளனரா?

P.C.R பரிசோதனையை மேற்கொள்ள தொழில்நுட்ப அறிஞர்கள், சிறப்பு அறிவுள்ள விஞ்ஞானிகள் காணப்பட வேண்டும். இத்தகைய மூலக்கூறு உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய தொழில்நுட்ப வல்லுனர்கள் பின்வரும் 03 பெரிய அரசு நிறுவனங்கள் மூலம் பயிற்சியளிக்கப்படுகின்றார்கள்.

  1. மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் உயர் டிப்ளோமா, சுகாதார அமைச்சகம்
  2. பி.எஸ்.சி.  மருத்துவ ஆய்வக அறிவியல் சிறப்பு பட்டப்படிப்புகள்
  3. பி.எஸ்.சி.  மூலக்கூறு உயிரியல் சிறப்பு பட்டம், திட்டங்கள்

Covid 19 நோய்த்தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை P.C.R  பரிசோதனைகளை சிறந்த முறையில் மேற்கொள்வதன் மூலமாக இனங்கண்டு கொள்ளலாம்.

P.C.R பரிசோதனையின் உணர்திறனில் பங்களிப்புச் செய்யும் காரணிகள்?

1.குறைந்தபட்ச வைரஸ் சுமை.

  • ஒரு பரிசோதனையை மேற்கொள்வதற்கு  ஒரு குறிப்பிட்ட அளவுப் பெறுமானம் தேவைப்படுகின்றது. Covid 19 P.C.R பரிசோதனையில் வைரஸினை இனங்கண்டு கொள்ளத் தேவையான குறைந்தபட்ச வைரஸ் மரபணுக்கள் உள்ளன. பெறப்படுகின்ற மாதிரியின் மைக்ரோலிட்டருக்கு மரபணு நகல்களின் அளவு cp / µL எனப்படும் ஒரு அலகு மூலம் அளக்கப்படுகின்றது.
  1. பரிசோதனையுடன் தொடர்புடைய நோய்க்கிருமியின் தனித்தன்மை.
  2. மாதிரிகள் சேகரிப்பதற்கான நேர எல்லை.
  • Covid 19 நோய்த்தொற்றின் அறிகுறிகள் 2ம் நாள் தொடக்கம் 14ம் நாள் வரை தென்படுகின்றன.
  1. பெறப்படும் மாதிரியின் தரம்.

இவ்வாறாக Covid 19 நோய்த் தொற்றினைக் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு P.C.R பரிசோதனைகள் பெரிதும் பங்களிப்புச் செய்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.