தற்காலத் தொழில்நுட்ப உலகில் WhatsApp பாவனை மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. அலுவலகப் பணிகள் தொடக்கம் பொழுதுபோக்கு சார்ந்த செயற்பாடுகள் வரை WhatsApp Groups களை உருவாக்கி கலந்துரையாடல்கள் மேற்கொள்ளுதல்; ஒருவருக்கொருவர் தனிப்பட்ட ரீதியில் செய்திகளை அனுப்புதல் மற்றும் பிடித்த தகவல்களைப் பரிமாறுதல் போன்ற பல செயற்பாடுகளை WhatsApp மூலமாக மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வரும் இச் செயலியில் சில வேளைகளில் தாம் விரும்பத்தகாத நபர்களிடமிருந்து தொடர்ச்சியாக இடையூறுகள் உண்டாவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இந்த வேளையில் அவர்களை Bolck செய்வது மட்டுமல்லாமல்; அவர்கள் மீது WhatsApp நிறுவனத்திடம் WhatsApp மூலமாகவே முறைப்பாட்டினை சமர்ப்பிக்கவும் முடியும்.
இவ்வாறு முறைப்பாடு செய்வதற்காக பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- Settings தேர்வினைக் Click செய்க.
- WhatsApp இனை Open செய்து அதன் இடப்புறத்தில் காணப்படும் மூன்று புள்ளிகளை தேர்வு செய்து பின்னர் அங்கு காணப்படும் Settings என்னும் தேர்வை Click செய்ய வேண்டும்.
- Contact us என்ற விருப்பத்தினைத் தேர்வு செய்க.
- Settings என்னும் தேர்வை Click செய்து உள்நுழைந்தவுடன் Contact us எனும் தெரிவினைக் Click செய்ய வேண்டும்.
- உங்கள்Email இனை உள்ளிட வேண்டும்.
Contact us எனும் தெரிவினைக் Click செய்து உள் நுழைந்தவுடன் தங்களது Email இனை உள்ளிட வேண்டும், அதன் பின் உங்கள் Email இனை உறுதி செய்வதற்காக மீண்டும் Email இனை பதிவிட வேண்டும். அதன் பின் தங்களது முறைப்பாட்டினைத் தெரிவிப்பதோடு தாங்கள் முறைப்பாடு செய்யும் நபரிடமிருந்து வரும் Chats களை Screen Shot மூலம் அங்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறான படிமுறைகளைப் பின்பற்றி முறைப்பாடு செய்வதன் மூலம் உங்கள் முறைப்பாட்டினை WhatsApp நிறுவனம் ஏற்றுக் கொண்டு; அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்குரிய சிறந்த தீர்வினையும் வழங்கும்.