Facebook தனது Mobile App-ல் Quiet Mode  என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த Quite Mode ஆனது பெரும்பாலான Notification ளை இடைநிறுத்துகின்றது.

Facebook குறிப்பிடும் அந்த Notification பிரிவில் எதெல்லாம் சேர்க்கப்படும் மற்றும் எதெல்லாம் Block  செய்யப்படும் என்பதைப்பற்றி தற்போது வரையில் போதுமான விபரங்கள்  இல்லை. ஆனால், இதற்கும் “mute push notification” என்கின்ற அம்சத்திற்கும் தொடர்பு இல்லை என்பதனை Facebook விளக்கியுள்ளது.

Mute push notification எனும் அம்சமானது push notification னை மட்டுமே நிறுத்துகிறது, ஆனால் Facebook app-ற்குள் வரும் Notification ளை நிறுத்தாது. ஆனால் கூறப்படும் Quite mood  ஆனது அதை சாத்தியப்படுத்தும் என்று நம்பலாம்.

இதை நீங்கள் Activate செய்ததும், அது இயக்கப்பட்டிருப்பதை நினைவூட்டுகிறது மற்றும் இது எப்போது வரை நீடிக்கும், எவ்வளவு நேரம் இருக்கும் என்பதையும் காண்பிக்கிறது.

இந்த Setting ஆனது உங்கள் Facebook ல் உள்ள Your Time on Facebook எனும் Dashboard ன் கீழ் காணலாம்.  Quite mode அறிமுகமானது இந்த Dashboard இல் ஒர் பெரிய Update ஆகும்.

“Quite mode வழியாக கைமுறையாகவும் ஒரு அட்டவணை உருவாக்க முடியும். அதாவது Online ல் உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதற்கான எல்லைகளை நீங்களே அமைக்கலாம். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கவனம் செலுத்துவதற்கும், கவனச்சிதறல் இல்லாமல் தூங்குவதற்கும் அல்லது உங்கள் நேரத்தை வீட்டிலேயே எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதனை நிர்வகிப்பதற்கும், நீங்கள் Facebook ஐ எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கான சரியான சமநிலையைக் கண்டறிவதற்கும் உதவும் கருவிகள் எங்களிடம் உள்ளன” என்று Facebook நிறுவனம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.