வெற்றியை அடைய நிதி கல்வியறிவாளர் Rich Dad Poor Dad எழுத்தாளர் ராபர்ட் கியோஸாகி Toru Kiyosaki கூறும் சில சிந்தனைகள்.

பிறரிடம் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவது அவருக்கு நன்மை செய்வது தான்; ஆனால் அதனினும் உயர்வானது அவரிடம் உள்ள நிறைகளைப் பாராட்டுவது.”

ராபர்ட் கியோஸாகி 1947 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் திகதி பிறந்தார். இவர் அமெரிக்கத் தொழிலதிபர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த எழுத்தாளர், கல்வியாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர், வானொலி ஆளுமை கொண்டவர், கியோசாகி Rich Global LLC and the Rich Dad Company என்ற தனியார் நிதிக் கல்வி நிறுவனத்தை நிறுவியவர், உலக அளவில் அதிகமான விற்பனையான நிதி மற்றும் முதலீடு தொடர்பான Rich Dad Poor Dad புத்தகத்தின் ஆசிரியர் போன்ற சிறப்புக்களைப் பெற்று திகழ்கின்றார். இத்தகைய அறிவாற்றலுடைய இவர் வெற்றி பெறுவதற்கான சில சிந்தனைகளை முன்வைத்துள்ளார்.

  • நீங்கள் ஒன்றை வாசித்து தெரிந்து கொள்வதை விட அனுபவ ரீதியில் தெரிந்து கொள்ளுங்கள். அப்போது நீங்கள் சிறந்தவராக செயற்பட முடியும்.
  • நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையினை ஆடம்பரமின்றி மிக எளிமையாக வாழப் பழகுங்கள்.
  • நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தவறிழைக்கும் போது அந்தத் தவறுகளிலிருந்து முன்னேறுவதற்கான பாடத்தினைக் கற்றுக் கொள்ளுங்கள்.
  • ஏதோவொரு விடயத்தை தொடர்ந்தும் கற்றுக்கொண்டிருங்கள். கற்பதை என்றும் நிறுத்திக்கொள்ளாதீர்கள்.
  • அதிகளவு செலவு செய்யாதீர்கள். தேவைக்கு ஏற்ற வகையில் செலவழித்து மிகுதியை சேமித்திடுங்கள்.
  • எதிர்பாராத நேரங்களில் ஏற்படுகின்ற எதிர்கால செலவுகளுக்கு திட்டங்களைத் தீட்டி அதனை செயற்படுத்துங்கள்.
  • தெளிவான மற்றும் துல்லியமான நிதி இலக்குகளை திட்டமிட்டு செயற்படுத்துங்கள்.
  • உங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு அதனை சிறந்த முறையில் செய்து முடியுங்கள்.
  • உங்களது சிந்தனைக்கு ஒப்பான சிந்தனை கொண்ட மனிதர்களை உங்கள் அருகில் வைத்துச் செயற்படுங்கள்.
  • நீங்கள் ஒரு இலக்கை அடைய வேண்டும் என்று முயற்சித்தால் அதற்காக செல்ல வேண்டிய பாதையை நோக்கிச் செல்லுங்கள். உங்கள் இலக்கை அடைய தேவையான விடயங்களில் மாத்திரம் கவனத்தை செலுத்துங்கள்.
  • நீங்கள் கடினமாக உழைக்கும் போது உங்களுக்கு புதிய வாய்ப்புக்கள் உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
  • நீங்கள் ஒரு செயலை ஆரம்பித்து அதில் தோல்வியைத் தழுவினாலோ அல்லது அதில் நீங்கள் இழப்புக்களைச் சந்தித்தாலோ அதற்காக மனம் தளர்ந்து பயம் கொள்ளாதீர்கள்.
  • நீங்கள் கடினமாக உழைப்பதற்கான நோக்கத்தினை அறிந்துகொண்டு அந்த இலக்கை அடைவதற்காக செயற்படுங்கள்.
  • நீங்கள் அதிகளவு சேமிப்பை மேற்கொள்ளுவதை விட முதலீடுகள் செய்து வியாபாரத்தைப் பெருக்குங்கள்.
  • நீங்கள் ஒரு பொருளை கொள்வனவு செய்வதற்கு முன்னர் உங்களால் இந்தப் பொருளை கொள்வனவு செய்ய முடியுமா என்ற கேள்வியை எழுப்புங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.