உடல் உறுப்புக்கள் வலுவற்றிருந்த போதிலும் இதயம், மூளை என்பவற்றின் இயக்கத்தை மட்டும் கொண்டு விண்வெளியின் அதிசயிக்க தகவல்களை உலகிற்கு வெளிப்படுத்திய பிரபஞ்ச நாயகன் Stephen Hawking . 1942ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பிறந்த இவர் சிறுவயதில் துடிப்புமிக்கவராக திகழ்ந்து தனது 23வது வயதில் “நரம்பு மண்டல தாக்கம்” எனும் கொடிய வாதைக்கு உள்ளாகி தன் வாழ்வின் ஏனைய காலத்தை சக்கரநாற்காலியில் கழித்தாலும்; உலகத்தை தன் பக்கமாக ஈர்த்துக் கொள்ள அவர் பின்வாங்கவில்லை.

பேரண்டத்தைப் பற்றிய பேரறிவு கொண்ட இவர் பிரபஞ்சத்தின் இயக்கம், காலத்தின் இதயத்துடிப்பு என்பவற்றை அளந்தார். தன் உடலில் செயலிழக்கும் உறுப்புக்களுக்கு சமமான கருவிகளை உருவாக்கி தன்னை வளப்படுத்திக் கொண்டார். சான்றாக, தனது கன்னத்தசைகளின் அசைவுகள் மூலம் கணினியை செயற்படுத்தி பேசும் தொழில்நுட்பத்தை வடிவமைத்தார். இதனைக்கொண்டு பல உரைகளையும் நிகழ்த்தினார். ‘மரணம் பற்றி எனக்கு கவலை இல்லை; அது நிச்சயம் ஒரு நாள் வரும். ஆனால் அது வருமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கப்போவதில்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது.” என்று கூறி பேரண்டம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.

பேரண்டம் பெருவெடிப்பில் தோன்றியதாகவும்; பெருவெடிப்பில் தோன்றும் பேரண்டமானது கரு வெடிப்பில் முடிகிறது என்று கூறி  இதுவரை எவரும் கணித்திட முடியாத பேரண்டத்தின் ஆதியையும், அந்தத்தையும் கணித்தார். அண்டவெளி எவ்வாறு தொடர்ந்து விரிவடைகிறது என்பதனையும் விளக்கிக் கூறினார். ‘விரிவடையும் பேரண்டத்தின் பண்புகள்” பற்றிய PhD ஆய்வேட்டினையும் தன் 24வது வயதில் சமர்ப்பித்தார்.

காலமும் வெளியும் கொண்ட வலைப்பின்னலானது நிறை அதிகமான பொருட்கள் இருக்கும் இடங்களில் வளைந்து செல்லும் என ஐன்ஸ்டீன் எடுத்துரைத்தார். அவ்வாறு வளைந்து செல்லும் போது காலவெளியில் தோன்றும் துளை ‘கருந்துளை” எனப்படும். கருந்துளைகள் உள்ளே பொருளின் நிறை ஒருங்கிணைக்கப்பட்டு Singularity எனும் நிலையை அடையும். இச் Singularity நிலை கருந்துளையின் நடுப்பகுதியில் உள்ளது என  Stephen Hawking  நிரூபித்தார். பல கோடி ஆண்டுகளுக்கு முன் கருந்துளை வெடிப்பின் போது வெடித்துச் சிதறிய Singularity நிலையிலிருந்து பேரண்டம் உருவானதாகவும் இந்த வெடிப்பே ‘Big Bank Theory” எனப்படும் பெரு வெடிப்பு கொள்கை என்றும் Hawking கூறினார். கருந்துளை வெடிப்பிற்கு பின் சிறு கருந்துளைகள் உருவாவதாகவும் கண்டறிந்தார். கருந்துளைகளிலிருந்து அணுத்துகள்கள் வெளிப்படுவதையும் கண்டறிந்தார். இவை ‘Hawking கதிர்வீச்சு” என அழைக்கப்படுகிறது. இயல்பியல் உலகின் மாபெரும் 3 கோட்பாடுகளான சார்பியல் கோட்பாடு, அளவியல் கோட்பாடு, புவியீர்ப்புக் கோட்பாடு என்பவற்றிற்கான இணக்கப்புள்ளியை வெளிக்கொணர்ந்த பெருமை இவரையே சாரும். ‘Theory of everything” எனும் அனைத்திற்குமான கோட்பாட்டையும் முன்வைத்த புகழுக்குரியவரும் இவரே. அதுமட்டுமல்லாமல் 1988ல் ‘A PRIEF HISTORY OF TIME” எனும் நூலினை எழுதி அகில மக்களிடையே பிரசித்தி பெற்றார். இந் நூலானது தமிழ் மொழி உட்பட 40க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதோடு ஒரு கோடி பிரதிகள் விற்பனையாகி Guinness சாதனையிலும் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

‘மனதில் உறுதியிருந்தால் உடல் ஊனம் உள்ளிட்ட எந்த தடைகளையும் தகர்க்கலாம்” என்று கூறியது மட்டுமல்லாது தன் வாழ்வின் மூலம் வாழ்ந்தும் காட்டினார் Stephen Hawking. இந்த மாமனிதரின் வாழ்க்கையானது ‘Theory of everything” எனும் Hollywood திரைப்படம் மூலமாக உலகிற்கு வெளியானது. வலுவற்ற உடலுறப்புக்களைக் கொண்டிருந்த போதிலும் சாதித்துக்காட்டிய இம் மனிதர் அனைத்து தலைமுறையினருக்கு முன்னும் பெரும் மதிப்பிற்குரியவரே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.