“வெற்றி தற்செயலாக ஏற்படுவதில்லை. அதற்கு முயற்சியும் தியாகமும் தேவை. சாதாரணமாக மக்கள் செய்யத் தயாராக இல்லாத விடயங்களை செய்யத் தயாராக இருக்கின்றவர்களே அசாதாரண மக்கள்”.

ராபின் ஷர்மாவினால் எழுதப்பட்ட The 5AM club என்னும் நூலில் அதிகாலையில் எழுந்தவுடன் மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்வுகளும், அதன் பயன்களும் பிரபல்யம் வாய்ந்த தொழிலதிபர் மற்றும் அவரின் வழிகாட்டியான Spellbinder ஆகியோரினால் மாணவர்கள் என இங்கு அறிமுகப்படுத்தப்படும் தொழில் முனைவோர்கள் மற்றும் கலைஞர்களுக்கு விளக்கப்படுகின்றது. இந்தக் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் இங்கு கற்பனையாகவே சித்தரிக்கப்படுகின்றன. தனது பொக்கிஷத்தை விற்ற துறவி ஒரு புனைகதை எழுதியதைப் போலவே ராபின் சர்மா The 5AM club என்னும் நூலினை எழுதியுள்ளார்.

THE 5AM CLUB என்னும் நூலிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய பயன்தரும் தகவல்களை சிறிது அறிந்து கொள்வோம். அதிகாலையில் 5 மணிக்கு எழுந்து முதல் ஒரு மணி நேரத்தில் நீங்கள் மேற்கொள்கின்ற செயற்பாடுகளைப் பொறுத்தே உங்களது அந்த நாளுக்கான ஏனைய மணித்தியாலங்களின் செயற்பாடுகள் அமையும். இந்த ஒரு மணி நேரத்தை “Victory Hour” என்றழைக்கின்றார் ராபின் ஷர்மா. இந்த நேரத்தினை நீங்கள் உங்களின் மனம், உடல், ஆன்மா என்பவற்றை ஒருநிலைப்படுத்தி வைப்பதற்கு பயன்படுத்தும் படியாகக் கூறுகின்றார். “Victory Hour” என அழைக்கப்படும் ஒரு மணி நேரத்தினை Move, Reflect & Grow என வகைப்படுத்துகின்றார். முதல் 20 நிமிடங்களில் உடற்பயற்சி செய்யவும், அடுத்த 20 நிமிடங்களில் நம்மை நாம் அறிந்து கொள்ள தியானம் போன்றவற்றில் ஈடுபடுவதுடன்; இந்த நாளில் நாம் செய்யக்கூடிய செயற்பாடுகளை திட்டமிடவும், இறுதி 20 நிமிடங்களில் நல்ல நூல்களை வாசிக்கவும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டுமென THE 5AM CLUB என்னும் நூல் வழியாக ராபின் ஷர்மா கூறுகின்றார்.

மேலும் நீங்கள் வழமையாகச் செய்கின்ற செயற்பாடு அல்லாத புதிய ஒரு செயற்பாட்டினை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். நீங்கள் இந்த புதிய செயற்பாட்டினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போது 21 வது நாளில் எதற்காக இதனை மேற்கொள்ள வேண்டுமெனும் சிந்தனை உருவாகின்றது. இதனைத் தாண்டி நீங்கள் தொடர்ச்சியாக அந்த செயற்பாட்டினை மேற்கொண்டு வரும் போது மனம், உடல், ஆன்மா ரீதியில் சிறந்த மாற்றத்தைப் பெற்றிருப்பீர்கள்.

THE 5AM CLUB நூலின் மூலம் பயன்பாடுகளால் ஆதரிக்கப்படாவிட்டால் உங்களது சிந்தனைகள் அனைத்தும் மதிப்பிற்குரியவையல்ல எனவும், உங்களை நீங்கள் ஆறுதல்படுத்திக் கொள்வதை நிறுத்தும் போதே உங்களுக்கான உலகம் தோன்றும் எனவும், நீங்கள் அசௌகரியம் என்று நினைக்கும் இடமே உங்களுக்கு சிறந்த வாய்ப்புக்களைத் தருகின்ற இடமென்றும், தலைமைத்துவப் பண்பு பழையனவற்றிலிருந்து புதிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது எனவும், எல்லா மாற்றங்களும் முதலில் கடினமாகவும், இடையில் சிக்கல்களை ஏற்படுத்துவதாக இருப்பினும் இறுதியில் நன்மையளிக்கின்றன எனவும் தோற்றம் உண்மையில் ஒரு நபரின் தரத்தை வெளிப்படுத்தாது எனவும் ராபின் ஷர்மா வெளிப்படுத்துகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.