Whatsapp என்பது உலகின் மிகவும் பிரபலமான messaging செயலியாகும். கடந்த சில ஆண்டுகளில் வழக்கமான புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும், அமெரிக்க நிறுவனம் இந்த செய்தியிடல் செயலியில் புதிய அம்சங்களைச் சேர்க்கிறது. இப்போது பல சாதனங்களில் ஒரே Whatsapp கணக்கைப் பயன்படுத்தலாம். புதிய அம்சத்துடன் அந்த சாதனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது.
உங்கள் Smart phone- இல் உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, Whatsapp உள்நுழைந்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே எண்ணைக் கொண்ட மற்றொரு தொலைபேசியில் உள்நுழைவதற்கு முன், முதல் தொலைபேசியிலிருந்து வெளியேறுவது கட்டாயமாகும். இருப்பினும், புதிய அம்சம்; ஒரே நேரத்தில் பல smart phone-களிலிருந்து ஒரே கணக்கில் Whatsapp- ஐ பயன்படுத்த அனுமதிக்கும்.