End to end Encryption என்பது நீங்கள் ஒரு தகவலை இன்னொருவருக்கு அனுப்பும் போது நீங்கள் அனுப்புமிடத்தில் உங்கள் தகவல் பூட்டப்பட்டு பெறுனர் பகுதியில் திறக்கப்படுவதே ஆகும். End to end Encryption என்பதனை மேலும் எளிதாக விளக்கவேண்டுமெனின் நீங்கள் உங்கள் நண்பருக்கு “காலை வணக்கம்” என அனுப்புகின்றீர்கள் எனின் அந்த செய்தியானது “FDHGSYJWNSBJKKWJ” என்று புரியாத செய்தியாக மாற்றப்படும். இந்த செய்தி பின்னர் உங்கள் நண்பரின் WhatsApp இல் “காலை வணக்கம்” என மாற்றப்பட்டு காண்பிக்கப்படும். இந்த இடைப்பட்ட இடத்தில் யாரும் நீங்கள் அனுப்பிய செய்தியினை படிக்கவோ, மாற்றவோ முடியாது. இதனையே Encryption (குறியாக்கம்) எனக் கூறுகின்றனர். உங்களுக்கு இடையேயான இந்த செய்திப் பரிமாற்றத்தினை உங்கள் WhatsApp மூலமாக மாத்திரமே பார்வையிட முடியும்.
சில சமயங்களில் காவல்துறையினர் விசாரணையின் போது சந்தேகத்திற்குரிய இரு நபர்களுக்கிடையிலான உரையாடலை பார்க்க வேண்டுமாயின் அதனை சந்தேகிக்கப்படும் நபர்களின் கையடக்கத்தொலைபேசியினைக் கொண்டே பெறுகின்றார்கள. Hacking மூலமோ அல்லது புதிதாய் கணினிகளை இணைத்தோ அறிந்துகொள்வதில்லை.
Encryptions மிக முக்கியமான விடயங்கள் ஓரிடத்திலிருந்து இன்னுமோர் இடத்திற்கு பரிமாற்றம் செய்யப்படும் போது அங்கு பயன்படுத்தப்படுகின்றன. Encryptions இல் “சமச்சீர் குறியாக்கம்”(Symmetric) மற்றும் “சமச்சீரற்ற குறியாக்கம்” (Asymmetric) எனும் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. சமச்சீர் குறியாக்கம் WhatsApp போன்றவற்றில் பயன்படுத்தப்படும். (ஒரு திறப்பு இரண்டு பூட்டுகளையும் பூட்டும் அத்தோடு திறக்கும்.) சமச்சீரற்ற குறியாக்கம் இணையத்தளங்களில் பயன்படுத்தப்படும். (இரண்டு திறப்புகள் பயன்படும். ஒன்று நிறுவனத்திடமும் மற்றையது பயனரிடமும் காணப்படும். இவர்களைத் தவிர வேறு யாரும் பூட்டை திறக்க முடியாது) இன்னுமொருவர் இதனைத் திறப்பது எப்போதும் சாத்தியமற்ற விடயமாகக் காணப்படுகின்றது.