பிரபல குறுந்தகவல் செயலியான Whatsapp இதுவரை voice call மற்றும் Group video call அதிகபட்சமாக நான்கு பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. தற்சமயம் இந்த வரம்பு எட்டு பங்கேற்பாளர்களுக்கு நீட்டித்துள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் Group Video call சேவைக்கான தட்டுப்பாடு அதிகரித்து இருக்கும் நிலையில் whatsapp, group call அம்சத்தில் மாற்றம் செய்ய இருக்கிறது.
இது Group video call மற்றும் voice call போலவே செயல்படுகிறது. நீங்கள் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட Whatsapp குழுவில் இருந்தால், நீங்கள் உட்பட எட்டு பேரைச் சேர்ப்பதன் மூலம் voice அல்லது video அழைப்பை மேற்கொள்ளலாம். பயனர்கள் group call செய்ய Whatsapp group சென்று உரையாட வேண்டியவர்களை தேர்வு செய்து அழைப்பை மேற்கொள்ளலாம். அழைப்பை மேற்கொண்டதும் Whatsapp Group Call அம்சத்தை இயக்கி விடும். இதுதவிர, பயனர்கள் calls tab சென்று பேச விரும்புவோரை தனித்தனியாக தேர்வு செய்து group call செய்யலாம்.