பல்வேறுபட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள், மற்றும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு; அவை மேலும் சிறந்த நிலையை அடைய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறாக WhatsApp நிறுவனமானது அறிமுகப்படுத்தவுள்ள புதிய மாற்றமானது முதலாவதாக iOS அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு Android மற்றும் கணினிக்கும் வெளியிடப்படவுள்ளது. உலகில் மிகவும் பிரபல்யமடைந்த குறுந்தகவல் பரிமாற்ற செயலியாக WhatsApp காணப்படுகின்றது. இது  பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றது. WhatsApp ல் காணப்படுகின்ற Voice Message, ஒலிஅழைப்பு மற்றும் காணொளி அழைப்பு போன்ற அம்சங்களுக்கு மேலதிகமாக Polling (கருத்துக்கணிப்பு) வசதியும் இணைக்கப்படவுள்ளது.

Group Chat ல் Polling வசதி இடம்பெறுவதோடு; குழுவிலுள்ள அங்கத்தவர்கள் இவ்வசதி மூலம் வாக்களிக்க முடியுமெனவும் அது குழுவில் காட்சிப்படுத்தப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது. WhatsApp ல் Polling வசதி இணைக்கப்படுவதற்கு முன்பு Telegram செயலியில் மட்டுமே இவ் வசதி பயன்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.