YouTube இனைப் பயன்படுத்தும் தயாரிப்பாளர்களுக்கு YouTube நிறுவனமானது அதிக வருமானத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. தற்காலத்தில் பிரபல்யமடைந்துள்ள Apple மற்றும் Amazon போன்ற நிறுவனங்களுடன் சவாலாக செயற்படுவதற்கு YouTube நிறுவனமானது முன்வந்துள்ளது. YouTube நிறுவனமானது podcast காணொளிகளை தயாரிப்பவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் நிதியுதவிகளை வழங்கவுள்ளது. அந்த வகையில் podcast Episodes களை Videos வடிவில் தயாரித்து வழங்கும்  தனிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு 3.8 மில்லியன் வரையிலான நிதியுதவியும், podcast நிறுவனங்களுக்கு 23 மில்லியன் வரையிலான நிதியுதவியும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. தற்போது இணையத்தில் Videos மக்களால் விரும்பி பார்க்கப்படுவதைப் போல podcast எனப்படுகின்ற Audio வடிவான தகவல்களும் மக்களினால் விரும்பி கேட்கப்படுவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.  Apple மற்றும் Amazon போன்ற நிறுவனங்கள் podcast உருவாக்கத்தில் அதிக பங்களிப்பினை நல்கி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.