தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்காலகட்டத்தில்  மனிதனும் அதற்கு இசைவாக்கமடைந்து வாழப் பழகியுள்ளான். அந்த வகையில் Google நிறுவனமானது “அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க உதவும் டிஜிட்டல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான திட்டம்” என்னும் தலைப்பில் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டிருக்கின்றது. தற்போது அனைத்துத்  துறைகளிலும் Online தொழில்நுட்பம் அவசியமானதொன்றாகக் காணப்படுகின்றது. சிறந்தநடுத்தர நிலையில் உள்ளோரும் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய தேவை தற்போது நிலவுகின்றது. இருப்பினும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதில் சில சிக்கல் நிலைகள் காணப்படுகின்றன. இவற்றை சீர் செய்து பொருளாதாரத்தில் நிலையான தன்மையொன்றினை உருவாக்குவதற்காகவும்சிறந்த வேலை வாய்ப்புக்களை பெறுக்கொடுப்பதற்காகவும் கூகுள் நிறுவனம் தற்போது Google Career Certificates” இனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஒரு சிலருக்கு பல்கலைக்கழக பட்டப்படிப்பு என்பது எட்டாக் கனியாகக் காணப்படுகின்றது. னால் ஒரு சிறந்த தொழிலை பெற்றுக்கொள்வதற்காக டிப்ளோமா உள்ளிட்ட குறுகிய பட்டப்படிப்புகளை கற்க வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. தற்போது இந்த நிலை தேவையில்லை. இதற்கு சிறந்த மாற்றீடாக Google Career Certificates” காணப்படும்  என Google நிறுவனம் கூறுகின்றது. ஆறு மாதங்களில் நிறைவு செய்யக்கூடிய இந்தப் பயிற்சிநெறிக்கு கட்டணம் $49 செலுத்தி இணைந்து கொள்ளலாம். 

இந்தப் பயிற்சி நெறியினைப் பின்தொடர்வதால் குறிப்பிட்ட துறையில் சிறந்த நிபுணத்துவத்தையும்தொழிலில் முன்னேற்றத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். Google இன் Google Career Certificates” செயற்பாட்டின் மூலம் கல்லூரிப் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய வேண்டிய தேவை இல்லை. இதில் இணைந்து பயிற்சி பெறுகின்றவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை உருவாக்கிட பல்வேறு நிறுவனங்களுடனும் Google நிறுவனம் தொடர்பை ஏற்படுத்தி வருகின்றது. 

“Google Career Certificates” மூலம் பெறும் நன்மைகள். 

  • A pathway to jobs: சிறந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் எளிதில் சிறந்த நிறுவனத்தில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளலாம். 
  • Become job-ready for in-demand, high-paying roles:  சராசரியாக ஆண்டுக்கு $50,000 ஊதியமாக கிடைக்கின்ற வேலைவாய்ப்ப்பினைப் பெற்றுக் கொள்ளலாம். 
  • Earn a certificate that helps you stand out:  நீங்கள் பெற்றுக்கொண்ட இச் சான்றிதழை LinkedIn இல் பகிரலாம். அத்தோடு  தனியாக Print  செய்தும் பயன்படுத்திக்கொள்ளலாம். 
  • Gain access to career resources: கற்பதோடு மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல் வேலைவாய்ப்பை பெறக்கூடிய பல்வேறு பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ளலாம். 

தற்போது மூன்று முக்கிய பணிகளுக்கான பயிற்சிகள் இதன் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  1. Data Analyst – Data Analyst பணி என்பது தரவுகளை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கக்கூடிய பணி ஆகும். இதில் வழங்கப்படும் பயிற்சியானது தற்சமயம் பயன்பாட்டில் இருக்கக்கூடிய Toolsகளைக் கொண்டு தரவுகளை எவ்வாறு ஆராய்வதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்படும். சராசரியாக $66,000 ஆண்டு சம்பளமாக இந்தப்பணிக்கு வழங்கப்படுகிறது.
  2. UX Designer – User experience (UX) ஒரு தொழில்நுட்பத்தை பயனாளர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கும் பணி. சராசரியாக $75,000 ஆண்டு சம்பளமாக இந்தப்பணிக்கு வழங்கப்படுகிறது.  
  3. IT Support Specialist – அனைத்துவிதமான தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் பயிற்சி இதன் போது வழங்கப்படும். சராசரியாக $55,000 ஆண்டு சம்பளமாக இந்தப்பணிக்கு வழங்கப்படுகிறது. 

முற்று முழுவதுமாக Online மூலமாகவே பயிற்சிகள்  வழங்கப்படும் என்பதனால் ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த பயிற்சியை தொடரலாம் எனவும்;  6 மாதத்தில் ஒரு பயிற்சிநெறியை நிறைவு செய்யும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும்  Google நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.