WhatsApp Business App உங்கள் வாடிக்கையாளர்களுடன் இலகுவில் தொடர்புகளை ஏற்படுத்தி உங்கள் வணிகத்தை Brand ஆக மாற்றுவதற்கு பயன்படும்.

மிக பிரபலமான செய்தியிடல் (messaging) Appஆன WhatsApp ற்கு உலகம் முழுவதும் பல பில்லியன் பயனர்கள் உள்ளனர். WhatsApp மிகவும் பிரபலமான செய்தியிடல் தளமாக இருப்பதால், சிறு வணிகங்கள் வளர ஏராளமான வாய்ப்புகளை WhatsApp வழங்குகிறது. இதற்காக WhatsApp வணிகம் (WhatsApp Business) Application; வணிகம் மற்றும் நுகர்வோரை இணைக்க WhatsApp இல் ஒரு தனிப்பதிப்பைக் கொண்டிருப்பது தான் ‘WhatsApp Business’ ற்கான முழு திட்டம். சிறு வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் தொடர்புபடுத்திக் கொள்ளவும் அவர்களது Order களை  நிர்வகிக்கும் விதத்திலும் இந்த App வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘WhatsApp Business’ ஆனது பரந்த அளவில் சிறு வணிகம் செய்யும் முதலாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. WhatsApp மூலம் உங்கள் வணிகத்தின் சுயவிபரத்தை நீங்கள் உருவாக்கலாம், மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி போன்ற முக்கிய தகவல்களையும் பகிரலாம். ‘WhatsApp Business’ மூலமாக நீங்கள் உங்கள் தயாரிப்புகளை காண்பிப்பதற்காக ஒரு catalog ஐ தயாரிக்கலாம். நீங்கள் தையல்  வணிகம் செய்பவராக இருந்தால், புதிய வகை ஆடைகள் குறித்த புதுப்பிப்புகளை (updates) உங்கள் வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பலாம். அவர்களுடைய சந்தேகங்களுக்கு ‘WhatsApp Business’  மூலம் பதிலளிக்கலாம். கூடுதலாக, விரைவான பதில்கள், வாழ்த்து செய்திகள் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் மிக எளிதாக தொடர்புப்படுத்திக்கொள்ளலாம்.

‘WhatsApp’ மற்றும் ‘WhatsApp Business’  இரண்டிற்குமான வித்தியாசங்களை பார்ப்போம்…

‘WhatsApp’ மற்றும் ‘WhatsApp Business’ ஆகிய இரண்டும் தனித்தனியான Applications ஆகும். இரண்டும் ஒன்று போல தோன்றினாலும் இரண்டு Appகளும் வேறுபட்டவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான ஒரு செய்தியிடல் App  தான் ‘WhatsApp’. ஆனால் ‘WhatsApp Business’ என்பது உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தளம். WhatsApp Business ஐ பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி உங்கள் Brand ஐ வளர்ப்பதற்கு பயன்படும்.

  • WhatsApp Business ல் எவ்வாறு ஒரு கணக்கை ஏற்படுத்துவது?
  • App ஐ பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.
  • உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்யவும்.
  • OTP மூலமாக உங்கள் கைபேசி எண்ணை சரிப்பார்த்துக் கொள்ளவும்.
  • வணிகத்தின் பெயர் மற்றும் வகையை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

நீங்கள் WhatsApp Business Account ல் இணைந்துவிட்டீர்கள்.

இச்செயலியில் உங்கள் வணிக பொருட்கள், சேவைகளை காட்சிபடுத்த catalog களை உருவாக்கிடுங்கள். தகவல்களைத் தன்னியக்கப்படுத்தவும், வகைப்படுத்தவும் மற்றும் விரைவில் பதிலளிக்கவும் உதவுகின்ற கருவிகளைக்(Tools) கொண்டு வாடிக்கையாளர்களுடன் எளிதில் தகவல்களை பரிமாற்றிக் கொள்ளுங்கள்.

சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளருக்கான ஆதரவை வழங்குவதிலும், அவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை அனுப்புவதிலும் WhatsApp Business உதவிடும்.

வணிகர்களே WahtsApp Business செயலியை பயன்படுத்திப் பயனடையுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.